சட்டம் என் கையில் படத்தில் வித்தியாசமான சதீஷை பார்க்கலாம்... இயக்குநர் சாச்சி பரபர!

சென்னை : நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் தற்போது நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக மாறியுள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் அடுத்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ் சாதாரண கேரக்டர்களில் நடித்து பின்பு தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டவர். விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு காமெடி கலாட்டாக்களை படத்தில் செய்து வந்தவர். இவரது டைமிங் காமெடிக்கு கோலிவுட்டில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

நாயகனாக நடிக்கும் சதீஷ்

நாயகனாக நடிக்கும் சதீஷ்

எத்தனை காலம்தான் ஹீரோக்களுக்கு ப்ரெண்டாக நடிப்பது என்று நினைத்தாரோ என்னவோ தற்போது நாயகனாக களமிறங்கியுள்ளார். சமீபத்தில் இவர் நாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக பவித்ரா லஷ்மி நடித்திருந்தார்.

நாய் சேகர் படம்

நாய் சேகர் படம்

நாயுடன் இவர் இணைந்து செய்த காமெடி கலாட்டாக்கள் படத்தில் கவனம் ஈர்த்தது. தற்போது மீண்டும் நாயகனாக களமிறங்கியுள்ளார் சதீஷ். இந்த முறையும் இவர் காமெடி நாயகனாக களமிறங்கியிருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. இந்தமுறை அவர் சீரியஸ் களத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

சட்டம் என் கையில் படம்

சட்டம் என் கையில் படம்

சட்டம் என் கையில் என்ற கமல் பட தலைப்பில் இவர் தற்போது நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நேற்று மாலை வெளியானது. இந்தப் போஸ்டரில் முகத்தில் ரத்தக் காயங்களுடன் மிகவும் சீரியசாக காணப்படுகிறார் சதீஷ். படத்தை இயக்கியுள்ளார் சாச்சி.

பர்ஸ்ட் லுக் வெளியானது

பர்ஸ்ட் லுக் வெளியானது

இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்றைய தினம் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேஷன், சீட்ஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் சண்முகம் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

சிக்சர் பட இயக்குநர் சாச்சி

சிக்சர் பட இயக்குநர் சாச்சி

படத்தை சிக்சர் என்ற முழுநேர காமெடி படத்தை எடுத்த சாச்சி இயக்கியுள்ளார். படம் குறித்து பேசிய சாச்சி சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல என்றும் அவரது திறமையை வேறொரு கோணத்தில் சட்டம் என் கையில் படத்தில் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். அவரது நடிப்பு நிச்சயமாக அனைவரையும் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

த்ரில்லர் படத்தில் சதீஷ்

த்ரில்லர் படத்தில் சதீஷ்

தன்னுடைய முதல் படத்தில் முழுக்க முழுக்க காமெடியை நம்பி படமெடுத்த தான் இந்தப் படத்தில் த்ரில்லர் படத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும், கதையின் நாயகன் ட்ரிங்க் அண்ட் ட்ரைவ் கேசில் போலீசிடம் சிக்குவதாகவும் அந்த இரவில் அவருக்கு நடக்கும் சம்பவங்களும்தான் கதை என்றும் சாச்சி மேலும் கூறியுள்ளார்.

பரபரப்பான திரைக்கதை

பரபரப்பான திரைக்கதை

மென்மையாக துவங்கும் கதை அனைவரையும் தொடர்ந்து பரபரப்புக்கு உள்ளாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாகவும் கமர்ஷியல் த்ரில்லராக படம் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X