சதீஷ் ஹீரோவாகும் அடுத்தப்படம்... என்ன இவ்ளோ சீரியசா இருக்காரு?

சென்னை : காமெடி நடிகராக விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். சமீபத்தில் இவர் நாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் தற்போது சதீஷ் நாயகனாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ் மதராசப்பட்டினம் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பான நடிகர் என்ற பெயரை பெற்று ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.

டைமிக் காமெடியன் சதீஷ்

டைமிக் காமெடியன் சதீஷ்

டைமிங் காமெடி இவரது ஸ்டைலாக காணப்படுகிறது. கவுண்டர் காமெடியும் இவரது காமெடி கலாட்டாக்களில் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் ஹீரோக்களுக்கு நண்பராக இவர் களமிறங்கி காமெடி செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். சிவகார்த்திகேன் உள்ளிட்ட நாயகர்களுக்கும் இவர் நண்பராக நடித்து காமெடி செய்துள்ளார்.

சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர்

சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர்

இந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியானது நாய் சேகர். கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படம் சதீஷுக்கு சிறப்பாக கைக்கொடுத்த போதிலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

சதீஷ் நாயகனாகும் அடுத்தப்படம்

சதீஷ் நாயகனாகும் அடுத்தப்படம்

நாயுடன் மல்லுக்கட்டும் சதீஷின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. சதீஷுக்கு பவித்ரா லஷ்மி ஜோடியாகியிருந்தார். இந்நிலையில் தற்போது சதீஷ் மீண்டும் நாயகனாக களமிறங்கியிருக்கும் புதிய படம் சட்டம் என் கையில். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரத்தக் காயங்களுடன் சதீஷ்

ரத்தக் காயங்களுடன் சதீஷ்

இந்த போஸ்டரில் முகத்தில் ரத்தம் மற்றும் ரத்தக் காயங்களுடன் சதீஷ் காணப்படுகிறார். மிகவும் சீரியசாக அவரது முகம் காணப்படுகிறது. வழக்கமாக காமெடி நடிகர்கள் காமெடி களங்களில் படங்களில் ஹீரோக்களாக நடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் சதீஷ் சீரியசாக காணப்படுகிறார். அதனால் இது வழக்கமான காமெடி படமாக இருக்காது என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து ஹீரோவாகும் சதீஷ்?

தொடர்ந்து ஹீரோவாகும் சதீஷ்?

காமெடி ஹீரோவாக கோலிவுட்டில் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சந்தானம், தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அதைபோல சதீஷூம் ஹீரோவாக, அதிலும் சீரியசான ஹீரோவாக நடிக்க சபதம் எடுத்திருக்கிறாரோ என்று இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது எண்ணத் தோன்றுகிறது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வரும்போது இது உறுதிப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X