தலை நிறைய மல்லி பூ.. கழுத்து நிறைய செயின்.. பளபள மெரூன் டாப்ஸ்.. இதுல உம்மா வேற.. யார் இந்த நடிகை!

சென்னை: தலை நிறைய பூ.. கழுத்து நிறைய செயின் என பிரபல நடிகர் பெண் வேடத்தில் உம்மா கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Losliya Harbhajan 'Friendship' in Short Break | Arjun Sarja | Sathish

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது தமிழ் படம். சிவா நடிப்பில் வெளியான இந்த நகைச்சுவைப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்தார். இந்த படம் ஹிட்டடிக்க கடந்த 2018ஆம் ஆண்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான தமிழ் படம் 2 வெளியானது.

 தமிழ் படம் 2

தமிழ் படம் 2

இந்தப் படத்தையும் முதல் பார்ட்டை இயக்கிய சிஎஸ் அமுதன்தான் இயக்கியிருந்தார். இதிலும் நடிகர் சிவா மற்றும் திஷா பதானி லீடிங் ரோலில் நடித்திருந்தனர். நடிகர் சதிஷும் இந்தப் படத்தில் நடித்திருந்தார். பாகுபலி முதல் பல படங்களையும் கலாய்த்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

 கெட்டப் 2

கெட்டப் 2

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சதீஷ் பெண் போல் வேடமிட்டு நடித்திருந்தார். இந்நிலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த அந்த வீடியோவை நடிகர் சதீஷ் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளர். அதற்கு #தமிழ்படம்2 #Getup2 என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

ஃபுல் மேக்கப்

தலை நிறைய மல்லி பூ.. கழுத்து நிறைய செயன்.. லிப்ஸ்டிக், காஜல் என ஃபுல் மேக்கப்பில் பள பளவென மெரூன் டாப்ஸ், சாண்டல் நிற பேண்ட் என கலக்கலாய் உள்ளார் சதீஷ். அச்சு அசல் பெண்ணை போலவே உள்ள வீடியோவை பார்ப்பவர்கள் யார் இந்த நடிகைதான் என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு கச்சிதமாய் இருக்கிறார்.

 குவாரண்டைன் டைம் வீடியோ

குவாரண்டைன் டைம் வீடியோ

அதில் குலுங்கி குலுங்கி நடந்து கேரவனில் ஏறும் சதீஷ், சினுங்களுடன்.. ஒரு உம்மா கொடுக்கிறார். தற்போது ஊரடங்கு நிலுவையில் உள்ளதால் நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களின் குவாரண்டைன் டைம் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களையும் பழைய போட்டோக்களையும் சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார்

அந்த வகையில் சதீஷும் தனது பழைய வீடியோவை வெளியிட்டுள்ளார். சதீஷின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்கள்தான், இதை நயன்தாராவிடம் சொல்லிவிடுங்கள், என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X