Sathish :ஹீரோவா ஆனாலும் சதீஷ் மட்டும்தான் அதுக்கு சரிப்பட்டு வருவார்.. லோகேஷ் சொன்ன பாராட்டு!
சென்னை : நடிகர் சூர்யா, சதீஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் திட்டமிடப்பட்டப் படம் இரும்புக்கை மாயாவி. சூர்யாவின் கேரியரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
மாநகரம் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை சூர்யாவை வைத்து இயக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தான் மாநகரம் போன்ற படத்தை எடுத்துவிட்டு இரும்புக்கை மாயாவி போன்ற பேன்டசி கதையை இயக்க தனக்கு தயக்கம் இருந்ததால் இந்தப் படத்தை தான் கைவிட்டதாக லோகேஷ் தனது பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
இரும்புக்கை மாயாவி படத்தில் சதீஷ் கேரக்டரை உறுதிப்படுத்திய லோகேஷ் : நடிகர் சூர்யா, சதீஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் திட்டமிட்டப்படம் இரும்புக்கை மாயாவி. பேன்டசி த்ரில்லராக திட்டமிடப்பட்ட இந்தப் படத்தை மாநகரம் என்ற தன்னுடைய முதல் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவையும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்ட நிலையில், படம் கைவிடப்பட்டது.

இதனிடையே, இந்தப் படம் கைவிடப்பட்டதற்கு தான் மட்டுமே முழுமையான காரணம் என்று தன்னுடைய சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மாநகரம் போன்ற எளிமையான ஆனால் அழுத்தமான கதையை கொடுத்துவிட்டு, உடனடியாக பேன்டசி கதையை கையில் எடுக்க தனக்கு தயக்கம் இருந்ததாகவும் சில பெரிய பட்ஜெட் படங்களை எடுத்துவிட்டு இந்தப் படத்தை இயக்க தான் நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் சதீஷிற்கு மிகவும் முக்கியமான கேரக்டர் இருந்ததாகவும் ஆனால் படம் கைவிடப்பட்டதால் அவருக்கு அந்த கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனதாகவும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மாநகரம் படம் டைமில் இந்தப் படத்தின் கேரக்டரை தனக்கு லோகேஷ் சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சமீபத்தில் சிஎஸ்கே மேட்சின்போது லோகேஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது இந்தப் படம்குறித்து இருவரும் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நடிகர் சதீஷ் அதிகமாக காமெடி கேரக்டர்களில் நடிப்பதில்லை. மாறாக ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் நாய் சேகர் படம் வெளியானது. தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட்டில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தன்னிடம் இரும்புக்கை மாயாவி குறித்து பேசிய லோகேஷ், தான் ஹீரோவாக மாறினாலும், அந்தக் கேரக்டரை தான் மட்டுமே செய்ய முடியும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
தற்போது விக்ரம், மாஸ்டர் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். மேலும் விஜய்யின் லியோ படத்தையும் இயக்கி வருகிறார். அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2 உள்ளிட்ட கமிட்மெண்ட்கள் அவருக்கு உள்ள நிலையில், அடுத்ததாக இரும்புக்கை மாயாவி படத்தை அவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது. அப்படி இயக்கும நிலையில், நடிகர் சதீஷும் அதில் இணைவார் என்பது தற்போதே உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











