சூர்யாவாகவே மாறிய பாக்கியலட்சுமி கோபி.. க்யூட் வீடியோவை எடுத்த நீண்டகால நண்பர்!
சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி கேரக்டரில் கலக்கலான நடிப்பை வழங்கி வருகிறார் நடிகர் சதீஷ்.
இவர் இந்த கேரக்டரில் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் அதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இவர் இரு குடும்பத்தினரிடையே சிக்கி முழி பிதுங்கி வருவதை ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் சதீஷ். தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை தன்னுடைய பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரின்மூலம் மிகப்பெரிய புகழை பெற்றுள்ளார் நடிகர் சதீஷ். முன்னதாக இவர் சில தொடர்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமியில் இவர் நடித்துவரும் கோபி கேரக்டர் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்தத் தொடரில் நெகட்டிவ் ஷேடில் இவரது கேரக்டர் இருந்தாலும் இவரது இயல்பான மற்றும் காமெடியான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் சீரியலில் இருந்து விலகுவதாக வந்த தகவலால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

ரசிகர்களை கவர்ந்த கோபி கேரக்டர்
வயதை மீறிய திருமணம், முதல் மனைவி, இரண்டாவது மனைவி, மூன்று பிள்ளைகள், பெற்றோர் என அனைத்தையும் மீறி தன்னுடைய காதலை வில்லத்தனம் செய்தாகிலும் திருமணத்தில் முடித்த சாமர்த்தியம், தற்போது இரண்டாவது திருமணத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என அடுத்தடுத்து இந்தக் கேரக்டரில் சதீஷிற்கு நடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ள நிலையில், அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் சதீஷ்.

நகைச்சுவை கலந்த வில்லத்தனம்
தான் பெற்ற பிள்ளைகள் வேண்டும் ஆனால், தன்னுடைய இயல்புக்கு சற்றும் பொருந்தாத தன்னுடைய மனைவி வேண்டாம் என்று நினைக்கும் கோபி, இதன்மூலம் நியாப்படுத்துகிறார். இந்த நியாயத்திற்கு ரசிகர்கள் கலவையான கமெண்ட்ஸ்களை அளித்து வருகின்றனர். கோபி பல தகிடுதத்தங்களை செய்து ராதிகாவை மணந்துக் கொள்ள, அதன்மூலம் அவர் படும் பாடுகளை நகைச்சுவை கலந்து கொடுத்து வருகிறார் சதீஷ்.

சிறப்பான கோபி கேரக்டர்
இந்த தொடரில் புதிதாக பழனிச்சாமி என்ற கேரக்டரில் நடிகர் ரஞ்சித் இணைந்துள்ள நிலையில், தனக்கு ஓய்வு வேண்டும் என்று சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட, அவர் சீரியலை விட்டு விலகுகிறாரா என்று கேள்வி எழுந்தது. ஆனால் தன்னுடைய காட்சிகள் குறைக்கப்படலாம் என்றுதான் தான் கூறியதாக விளக்கம் அளித்திருந்தார் சதீஷ். முன்னதாக, அவர் இல்லையென்றால் கோபி கேரக்டர் சிறப்பாக இருக்காது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.

நண்பர் எடுத்த வீடியோ
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் சதீஷ். தினந்தோறும் ஏதாவது பதிவினை போட்டு, ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் என்ற பாடலுக்கு க்யூட் பர்பார்மென்சுடன் வீடியோ வெளியிட்டுள்ளார் சதீஷ். இந்த வீடியோவை அவரது 13 ஆண்டுகால நண்பர் அன்புமணி எடுத்துள்ளார். இவர்கள் இருவரும் சின்னத்திரை மூலம் நண்பர்களானவர்கள். மகாராணி என்ற தொடரில் இணைந்து பணியாற்றியவர்கள். தற்போதும் ஒரு சீரியலில் இருவரும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் சதீஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











