அப்படியே ரீகிரியேட் பண்ணியிருக்காரே.. நடிகர் சதீஷின் போட்டோவை பார்த்து பிரமித்த ரசிகர்கள்!

சென்னை: நடிகர் சதீஷ் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பிரமித்துள்ளனர்.

Recommended Video

Actor Sathish Saloon | அப்பாவிற்கு shave செய்த Video | Lock Down Diaries

நடிகர் சதீஷ் கோலிவுட் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் ஆவார். விஜய், ஆர்யா, தனுஷ், சிவகாத்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடனுடம் நடித்து வருகிறார்.

தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹர்பஜன் சிங் நடிகராக அறிமுகமாகும் ஃபிரண்ட்ஷிப் படத்திலும் நடித்து வருகிறார்.

சிறு குழந்தையாக

சிறு குழந்தையாக

கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள சதீஷ் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் சிறு குழந்தையாக உள்ள சதீஷ், தனது அப்பாவை அண்ணாந்து பார்க்கிறார்.

ரீகிரியேட்

ரீகிரியேட்

அதேபோல் தற்போதும் ஒரு போட்டோவை எடுத்துள்ளார் சதீஷ், அதிலும் சிறுவயதில் எடுத்த போட்டோவில் அப்பாவை பார்த்தது போலவே திரும்பி பார்க்கிறார். அந்த இரு போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அரை ட்ரவுசர்

அரை ட்ரவுசர்

அதனை பார்த்த ரசிகர்கள், அதே குறுகுறு பார்வை அன்றும் இன்றும் என கிண்டலடித்துள்ளனர். சில நெட்டிசன்கள் அதான் அப்பா தோளுக்கு மேல வளர்ந்துட்டிங்களே, இப்போவாது அரை ட்ரவுசர மாத்திருக்கலாமே என கேட்டுள்ளனர்.

வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

இன்னும் சில நெட்டிசன்கள்.. இது நல்லாருக்கு.. இருந்தாலும் அப்பாவுக்கு ஒரு ஸ்டூல் போட்டு நிக்க வச்சிருக்கலாம்.. அப்போ நீங்க அண்ணாந்து பார்க்குற மாதிரி இருக்கும் என்று கூறியுள்ளனர். சதீஷின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X