லூகி மச்சி இங்க பாரு..வில்லனை கலாய்த்த சதீஷ்.. வைரலாகும் வீடியோ !

சென்னை : எதிர்நீச்சல், பைரவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளவர் நடிகர் சதீஷ்.

Recommended Video

Actor Sathish Tribute to Thalapathy Vijay | அப்படி போடு - வாத்தி Coming

நகைச்சுவை லெஜெண்ட் எனப் பலராலும் போற்றப்பட்டு வரும் கிரேசி மோகனிடம் பணியாற்றிய சதீஷ் இப்பொழுது திரைப்படங்களில் காமெடி நடிகராக கலக்கி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் செம ஜாலியாக தொடர்ந்து பதிவிட்டு வரும் சதீஷ் இப்பொழுது ஹாலிவுட் படங்களில் மிகப் பிரபலமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவரை வைத்து காமெடி செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.

கமல்ஹாசன் நடிக்கும்

கமல்ஹாசன் நடிக்கும்

தமிழ் சினிமாக்களில் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை வசனகர்த்தாவாக பணியாற்றியவர் கிரேசி மோகன். காமெடி வசனங்களை எழுதுவதில் வல்லவரான இவர் கமல்ஹாசன் நடிக்கும் பெரும்பாலான காமெடி திரைப்படங்களில் இவர்தான் வசனகர்த்தா. வசூல்ராஜா எம்பிபிஎஸ், காதலா காதலா உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், கதாசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார்.

கவுண்டரை போட்டு

கவுண்டரை போட்டு

இவ்வாறு தனது தனித்துவமான காமெடி படங்களின் மூலம் பிரபலமான கிரேசி மோகனிடம் வித்தையை கற்ற நடிகர் சதீஷ் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். போற போக்கில் ஒரு கவுண்டரை போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் சதீஷ் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

காமெடியில் கலக்கி

காமெடியில் கலக்கி

சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வரும் இவர் அதேபோல சமூக வலைதளங்களிலும், அவ்வப்போது சில பதிவுகளை இட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

டாம் ஹிட்டில்ஸ்டனை

டாம் ஹிட்டில்ஸ்டனை

சில நாட்களுக்கு முன்பு பிரேம்ஜி அமரனை பங்கமாக கலாய்த்த சதீஷ், இப்பொழுது ஹாலிவுட் திரைப்படங்களில் படு பயங்கரமான வில்லனாக அனைவராலும் அறியப்பட்ட " டாம் ஹிட்டில்ஸ்டனை" வைத்து செம்ம காமெடி வீடியோ ஒன்று தயாரித்து அதை தனது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரங்களில்

வில்லன் கதாபாத்திரங்களில்

தோர், தி அவசஞ்சர்ஸ் என பிரபலமான மார்வெல் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்த "டாம் ஹிட்டில்ஸ்டனை" அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மேலும் தோர் திரைப்படத்தில் "லூகி" என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

கச்சிதமாக பொருந்தும்

கச்சிதமாக பொருந்தும்

அந்த அளவுக்கு உலகம் முழுவதும் பிரபலமான வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கும் டாம் ஹிட்டில்ஸ்டன் "தோர்" திரைப்படத்தில் நடித்திருந்த காட்சி ஒன்றை டிவியில் ஒளிபரப்பியவாறு "லூகி மச்சி இங்க பாரு, சூப்பர்ல " என கச்சிதமாக அந்த வீடியோ உடன் பொருந்தும் வகையில் உருவாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்த சதீஷ்க்கு ரசிகர்கள் பாராட்டுகளையும் லைக்குகளையும் கமெண்ட்களையும் சிரிப்பு சத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X