ஆக மொத்தம் ஒரு சப்பாத்தி.. கொஞ்சூண்டு பொங்கல்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை மரண பங்கம் செய்த பிரபல நடிகர்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஆரிக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே நடந்த சண்டையை நடிகர் சதீஷ் மரண கலாய் கலாய்த்துள்ளார்.
நேற்றைய எபிசோடில் ஆரிக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தான் ஹைலைட்டாக இருந்தது.
அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்துவது, பார்வையாளர்கள் மட்டுமின்றி சக ஹவுஸ்மேட்ஸுக்கும் பிடிக்கவில்லை.

ஜெயிலுக்கு போன ஆரி அனிதா
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஆரியையும் அனிதாவையும் சுவாரசியம் குறைந்த போட்டியாளர்கள் என பிக்பாஸ் வீட்டின் ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர் ஹவுஸ்மேட்ஸ்கள். ஜெயிலுக்கு செல்லும் முன்பாகவே அர்ச்சனா உட்பட சிலரை கிழித்துவிட்டார் ஆரி.

சாப்பாடு பரிமாறுவது..
அதனை தொடர்ந்து பாலாஜி சில விஷயங்களை போட்டு விட்டதை தொடர்ந்து ஆரியிடம் விளக்கம் கேட்டார் அர்ச்சனா. அப்போது மொத்தமாக வச்சு செய்தார் ஆரி. பொங்கல், சப்பாத்தி என ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சாப்பாடு பரிமாறுவது தொடர்பாகவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விட்டுக் கொடுத்தேன்
தனக்கு சப்பாத்தி இல்லை என்று கூறிவிட்டு ரியோவுக்கு மறைமுகமாக சப்பாத்தி வழங்கியதாக வெளுத்து வாங்கினார் ஆரி. அதற்கு தனக்கான சப்பாத்தியை ரியோவுக்கு விட்டு கொடுத்ததாக கூறினார் அர்ச்சனா.

பொங்கல் விவகாரம்
இதனால் கடுப்பான ஆரி அதை வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே ஏன் கண்ணைக் காட்ட வேண்டும் என சாடினார். இதேபோல் ஆஜித்துக்கு பொங்கல் வைத்த விஷயத்தில் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டனர்.

கொஞ்சூண்டு பொங்கல்
இந்நிலையில் இதனை பார்த்த நடிகர் சதீஷ் இந்த பிரச்சனைக் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆக மொத்தம் ஒரு சப்பாத்தி கொஞ்சூண்டு பொங்கல்.. என குறிப்பிட்டு இதுக்காடா இப்படி அடிச்சுக்கிறீங்க என மறைமுகமாக சாடியுள்ளார்.

குடிய கெடுக்கப்போகுதோ..
இதனை பார்த்த நெட்டிசன்களும் அர்ச்சனாவை விளாசி வருகின்றனர். சதீஷின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த அர்ச்சனாவை எல்லாம் வெளிய துரத்தாம வீட்டுக்குள்ளையே வச்சிருக்காங்க, இன்னும் எத்தனை பேரு குடிய கெடுக்கப் போகுதோ தெரியல.. என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











