ஆண்களும் பெண்களும் சமம் கிடையாது - ஆடியோ வெளியீட்டு விழாவில் சதீஷ் பேச்சு

சென்னை: ஆண்களும் பெண்களும் சமம் கிடையாது என நகைச்சுவை நடிகர் சதீஷ் குடிமகான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் சதீஷ். ஆரம்பத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்துவந்த அவர் ஒருகட்டத்தில் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடனும் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் அதிகம் நடித்துவருகிறார். அதேசமயம் சதீஷின் காமெடியில் பெரிதாக ஒன்றும் நகைச்சுவை இல்லை என்றும் சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு.

சர்ச்சையை சந்தித்த சதீஷ்

சர்ச்சையை சந்தித்த சதீஷ்

சதீஷ் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஓ மை கோஸ்ட். இந்தப் படத்தில் அவருடன் சன்னிலியோன், தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சதீஷ் சன்னிலியோன் மற்றும் தர்ஷா ஆகியோரின் உடைகளை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் அதற்கு வருத்தமும் தெரிவித்தார். மேலும் தற்போது அவர் பேசும்போது கொஞ்சம் எச்சரிக்கையாகவே பேசவும் செய்கிறார்.

நாளைய இயக்குநர் ரன் அப் ஆனவரின் புதிய படம்

நாளைய இயக்குநர் ரன் அப் ஆனவரின் புதிய படம்

இந்தச் சூழலில் நாளைய இயக்குநர் சீசன் 6ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ் என்பவர் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் குடிமகான். இப்படத்தை சினாரியோ மீடியா ஒர்க்ஸ் தயாரித்திருக்கிறது. விஜய் சிவன் என்பவர் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பாலுமகேந்திராவிடம் பணி செய்த மெய்யேந்திரன் ஒளிப்பதிவாளராக கமிட்டாகியிருக்கிறார்.

ஆடியோ வெளியீட்டு விழாவில் சதீஷ்

ஆடியோ வெளியீட்டு விழாவில் சதீஷ்

இந்நிலையில் குடிமகான் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வடபழனியில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சதீஷ் பேசுகையில், "மது சிகரெட் அடிக்காத டீடோட்டலராக நான் இருப்பதால் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதற்காக நானும் இங்க அறிவுரை சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் ட்ரெய்லரில் அதை சரியாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் மதுவையோ, சிகரெட்டையோ தொடாமல் இருந்தால் அதன் பின் நாம் அதை வாழ்க்கையில் தொடவே மாட்டோம். நான் அப்படித்தான் இவற்றிலிருந்து ஒதுங்கினேன்.

ஆண்களும், பெண்களும் சமம் அல்ல

ஆண்களும், பெண்களும் சமம் அல்ல

இதுகுறித்து சில கல்லூரி நிகழ்ச்சிகளில் நான் பேசவும் செய்திருக்கிறேன். ஒரு பெண்கள் கல்லூரியில் கலந்துகொண்டபோதுகூட இதே விஷயத்தை வலியுறுத்தி பேசும்படி அந்தக் கல்லூரியின் முதல்வர் என்னிடம் கேட்டுக்கொண்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏன் பேசவேண்டுமென அவரிடம் கேட்டதற்கு ஆண்களுக்கு சமமாக பெண்களும் மது, சிகரெட் பழக்கத்தில் இருக்கிறார்கள் என கூறினார். ஆண்களும் பெண்களும் ஒருபோதும் சமமானவர்கள் இல்லை. பெண்கள் ஆண்களைவிட மேலானவர்கள். சொல்லப்போனால் அவர்கள் தெய்வத்திற்கு சமம்"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X