சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியலயே.. பிரபல நடிகையின் போட்டோவை பார்த்து பங்கம் செய்யும் நடிகர் சதீஷ்!
சென்னை: பிரபல நடிகை ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நடிகர் சதீஷ் பங்கமாய் கலாய்த்துள்ளார்.
தொலைக்காட்சி துறையில் இருந்து சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா பவானிஷங்கர். மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா சாப்டர் 1, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கத்தில்..
மேலும் குருதி ஆட்டம், ஓமணப்பெண்ணே, பொம்மாய், ஹாஸ்டல் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார் பிரியா பவானிஷங்கர்.

சேலையில் கலக்கல்
ருத்ரன், இந்தியன் 2, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானிஷங்கர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பிரியா பவானிஷங்கர் அண்மையில் கோல்டன் நிற சேலையில் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்.

நான் என்ன யோசிக்கிறேன்?
இந்நிலையில் அப்போது எடுத்த ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பிரியா பவானி ஷங்கர், நான் என்ன யோசிக்கிறேன் என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் மனதில் தோன்றியதையெல்லாம் கமெண்ட்டாக பதிவிட்டு வருகின்றனர்.

நடிக்க முடியாம போச்சே..
அந்த வகையில் நகைச்சுவை நடிகரான சதீஷும் பிரியா பவானிஷங்கரின் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது சதீஷ் கூட நடிக்க முடியாம போச்சே என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

ஹீரோவான சதீஷ்
நடிகர் சதீஷ், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக 'குக் வித் கோமாளி' பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications