டுபீஸ் ரெஜினா... முரட்டுக்குத்து கவுதம்... மேடையில் கலாய்த்த சதீஷ்!

நடிகர் கவுதம் கார்த்திக்கையும், நடிகை ரெஜினாவையும் காமெடி நடிகர் சதீஷ் மேடையிலேயே கேலி செய்தார்.

Recommended Video

நடிகர் கவுதம் கார்த்திக்கை கலாய்த்த சதீஸ்-வீடியோ

சென்னை: மிஸ்டர் சந்திரமௌலி பட விழாவில், நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை ரெஜினாவை காமெடி நடிகர் சதீஷ் மேடையிலேயே கேலி செய்தார்.

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மிஸ்டர் சந்திரமௌலி. யூடிவி தனஞ்ஜெயன் தயாரிக்கும் இப்படத்தை, திரு இயக்கியுள்ளார்.

Actor Sathish trolls Gautham and Regina in stage

இப்படக்குழு சார்பில் ரசிகர்களுக்கு வினா,விடை போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேக மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், படக்குழுவினர் இதனை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

விழாவில் பேசிய நடிகர் சதீஷ், நாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் நாயகி ரெஜினா ஆகியோரை மேடையிலேயே கேலி செய்தார்.

விழாவில் அவர் பேசியதாவது, " இந்த படத்தில் கவுதம் சிறப்பாக நடித்துள்ளார் என அனைவரும் பாராட்டினார்கள். ஏனென்றால், அவரது முந்தைய படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அவர் கேரக்டராகவே வாழ்ந்தார். உண்மையிலேயே அவரது கேரக்டர் அதுதான். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். பேயை பார்த்தால் அவருக்கு பயம். நான் அதைதான் சொன்னேன்.

ஏதேதோ ஆனேனே பாடலை பார்த்துவிட்டு இது குறைந்த பட்ஜெட் படம் என யாரும் நினைக்க வேண்டாம். ரெஜினாவின் உடையில் மட்டும் தான் குறைந்த பட்ஜெட் (அந்த பாடலில் ரெஜினா நீச்சல் உடையில் நடித்துள்ளார்). மற்றபடி படம் சிறப்பாக வந்துள்ளது" என அவர் கூறினார்.

நடிகர் சதீஷின் இந்த பேச்சு விழா அரங்கை சிரிப்பொலியால் அதிரவைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X