பாடகர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சதீஷ்.. சசிகுமாரின் ராஜவம்சம் படத்தில் பாட்டுப் பாடி அலப்பறை!
சென்னை:தமிழ் நடிகர்கள் பலர் தங்களது சினிமாவில் பாடல்களை பாடுவர். குரல் இனிமையாக இருந்தால் அது சாத்தியம் ஆகும். அந்த வகையில் தற்போது ராஜவம்சம் படத்தில் நடிகர் சதீஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார்.
தமிழில் சிவா நடித்த தமிழ்படம் மூலமாக அறிமுகமானார் சதீஷ் . இதில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் ஏ. எல் விஜய் இயக்கிய ஒரு படத்தில் துணை வசனகர்த்தாவாகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்த அனைத்து பட காமெடிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைப்பது கடினம் அதனை தனது வேலையாக்கி பலரையும் சிரிக்க வைத்து வருகிறார் சதீஷ்.
இவர் படங்களில் செய்யும் ஒவ்வொரு காமெடியும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது என்றே சொல்லலாம். சதீஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்பட உலகிலும் நடித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகர்கள் உடன் இவர் செய்த காமெடி அனைத்தும் ரசிக்க வைத்தன. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் ஒரு சில படங்களை தவிர மற்ற அனைத்து படங்களிலும் கண்டிப்பாக சதீஷ் இருப்பார். விஜய் உடன் கத்தி மற்றும் பைரவா, தனுஷ் உடன் நய்யான்டி மற்றும் தங்கமகன் போன்ற படங்களில் இவரது காமெடிகள் அதிகம் பேசப்பட்டது.
தற்போது கடந்த வருடம் திருமணம் ஆனது. உடனே சில நாட்களில் தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது சசிகுமார் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ராஜவம்சம் இப்படத்தில் ஒரு பாடலை சதீஷ் பாடியுள்ளார். இது இவருக்கு ஒரு புது முயற்சி முதல் முறையாக பாடியுள்ளார் சதீஷ். இப்படத்திற்கு சாம் சி. எஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தை கதிர்வேலு இயக்கியுள்ளார். இப்படம் ஒரு குடும்ப கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











