கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் !
சென்னை : காமெடி நடிகர் சதீஷ் அடிக்கடி சமூகவலைதளங்களில் போற போக்கில் ஒரு கமெண்ட்டை தட்டி விட்டு செல்வது வழக்கமான ஒன்றுதான்
அந்த வகையில் சமீபத்தில் காமெடி நடிகர் பிரேம்ஜி பதிவிட்ட ஒரு ட்வீட்டுக்கு பங்கமாக கலாய்த்து பதில் ட்வீட் ஒன்று போட்டுள்ளார் சதீஷ்.
இவர்கள் இருவரும் சமூகவலைதளங்களில் அடிக்கும் லூட்டியை பார்க்கும் ரசிகர்கள் திரைப்படங்களில் வரும் காமெடியை விட இது சுவாரசியமாக உள்ளதே என பார்த்து சிரித்தவாறு இதை வைரல் ஆக்கி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் திரைப்படங்களில்
காமெடி கிங் கிரேஸி மோகனிடம் வித்தையை கற்ற நடிகர் சதீஷ் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி நகைச்சுவை நடிகர்களில் மிகப்பிரபலமானவராக வலம் வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் கட்டாயம் இடம்பெறும் இவரது காமெடி இன்றளவும் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சிரிக்க வைத்து
சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷ் கூட்டணி எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஆரம்பித்து மான் கராத்தே, ரெமோ, மிஸ்டர் லோக்கல் என இவர்களது காமெடி காம்போ இன்றுவரை தொடர்ந்து வருகிறது. திரைப்படங்களில் தனது அசாத்திய கவுண்ட்டர்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்து வரும் சதீஷ் சமூக வலைதளங்களிலும் தனது வேடிக்கையான பேச்சின் மூலம் இணையவாசிகளை சிரிக்க வைத்து வருகிறார்.

கட்டாயம் ஒரு கதாபாத்திரம்
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் பிரேம்ஜி போட்ட ட்வீட் ஒன்றுக்கு பதிலளித்துள்ள சதீஷின் பதில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியும், காமெடி நடிகருமான பிரேம்ஜியை அறியாதவர்கள் தமிழ் சினிமாவில் யாரும் இல்லை. குறிப்பாக வெங்கட்பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் இவருக்கு கட்டாயம் ஒரு கதாபாத்திரம் இருந்துவிடும்.

மிகச்சிறந்த இசையமைப்பாளர்
சென்னை 28 திரைப்படத்தில் பிரேம்ஜியின் கதாபாத்திரம் மிக பிரபலமாக பேசப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வெங்கட்பிரபு இயக்கிய அனைத்து படங்களிலும் காமெடி கதாபாத்திரங்களில் தொடர்ந்து பிரேம்ஜி நடித்துக்கொண்டு வருகிறார். பிரேம்ஜியை பெரும்பாலான மக்களுக்கு காமெடி நடிகராக மட்டும் தெரியும், ஆனால் இவர் ஒரு மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேட்டிங் செல்லாதீர்கள்
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் பிஸியாக உள்ள பிரேம்ஜி அமரன் தற்பொழுது நகைச்சுவையான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது " உங்கள் மனைவியை மதிக்காத எந்த பெண்ணுடனும் டேட்டிங் செல்லாதீர்கள்" என படித்தவுடனேயே சிரிப்பு வரும்படி உள்ள இந்த ட்வீட் பதிவிற்கு நடிகர் சதீஷ் அவரது பாணியிலேயே பங்கமாக கலாய்த்து பதில் ட்வீட் போட்டுள்ளார்.

எஸ்கேப்பான பிரேம்ஜி
பிரேம்ஜியின் இந்த ட்வீட் பதிவை பார்த்த சதீஷ் "கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்" எனப் பங்கமாக கலாய்த்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் வயிறு குலுங்க சிரித்து வரும் நிலையில், பிரேம்ஜி இதற்க்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் பிரபலமாக பயன்படுத்திவரும் காமெடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து விட்டு சைலண்டாக எஸ்கேப் ஆகிவிட்டார். இவர்கள் இருவரும் சமூகவலைதளங்களில் அடிக்கும் லூட்டியை பார்க்கும் ரசிகர்கள் திரைப்படங்களில் வரும் காமெடியை விட இது சுவாரசியமாக உள்ளதே என பார்த்து சிரித்தவாறு இதை வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











