தாயுமான நடிகர்... புடவை அணிந்து குழந்தையை சமாளிக்கும் சதீஷ்!

சென்னை : நடிகர் சதீஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடித்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீசாகவுள்ளது.

சமூக வலைதளங்களில் பரபரப்புடன் செயல்பட்டுவரும் சதீஷ், தன்னுடைய மனைவி இல்லாத நேரங்களில் குழந்தையை கையாளும் வித்தையை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ் கோலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து கோலிவுட்டில் காமெடி களத்தில் நடித்து வரும் இவர் தற்போது குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லஷ்மியுடன் இணைந்து நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகனாகவும் கமிட் ஆகியுள்ளார்.

அண்ணாத்த படத்தில் சதீஷ்

அண்ணாத்த படத்தில் சதீஷ்

தற்போது தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ள அண்ணாத்த படத்திலும் இவர் நடித்துள்ளார். படத்தில் சூரி உளிளட்ட காமெடி நடிகர்கள் உள்ள நிலையில் சதீஷும் இணைந்துள்ளார். படத்தில் இவரது கேரக்டர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நாய் சேகர் படம்

நாய் சேகர் படம்

தொடர்ந்து நாய் சேகர் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளது. படத்தில் அந்த நாயுடன் சதீஷ் அடிக்கும் லூட்டி கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களிலும் பிசி

சமூக வலைதளங்களிலும் பிசி

படங்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் நடிகர் சதீஷ் தன்னை தொடர்ந்து பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். சக நடிகர்களுக்கு வாழ்த்துக்கள், தன்னுடைய படங்களின் அப்டேட்கள் என ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து பல தகவல்களை அளித்து வருகிறார்.

குழந்தையை சமாளிக்கும் சதீஷ்

குழந்தையை சமாளிக்கும் சதீஷ்

சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்று பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது தன்னுடைய குழந்தையை அதனுடைய அம்மா வெளியில் சென்றுள்ள போது எவ்வாறு சமாளிக்கிறேன் என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ளார். புடவை அணிந்து அதற்கு அம்மா லுக்கை அளித்து சமாளிப்பதாக தெரிவித்துள்ளார்.

காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா

அம்மா வேண்டும் என்று குழந்தை அடம்பிடிக்கும் போது இந்த வழிமுறையை கடைபிடிப்பதாகவும் தொடர்ந்து தனக்கே உரிய காமெடியுடன் இனிமே கேப்ப என்றும் முடித்துள்ளார் சதீஷ். இந்த பகிர்வு ட்விட்டர் பக்கத்தில் வைரலாகியுள்ளது. புடவையில் சதீஷ் நன்றாகவே உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X