Sathyaraj :இனி வில்லன் தான்.. அங்காரகன் டீசர் மூலம் உறுதிப்படுத்திய சத்யராஜ்!

சென்னை : நடிகர் சத்யராஜ் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக அங்காரகன் என்ற படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடித்துவரும் சத்யராஜ், இந்தப் படத்தின்மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.

Actor Sathyaraj again acts as a villain in Angaragan movie and the teaser released

வில்லனாக நடிக்கும் சத்யராஜ் : நடிகர் சத்யராஜ் வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக களம் கண்டவர். தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் முன்னணி நாயகிகளுடன் நடித்துவந்த சத்யராஜ், ஒரு கட்டத்தில் கேரக்டர் ரோல்களில் நடிக்கத் துவங்கினார். தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அங்காரகன் என்ற படத்தில் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார் சத்யராஜ். மலையாள நடிகை நியா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளார்.

ஜூலியன் மற்றும் ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள அங்காரகன் என்ற இந்தப் படத்தில் நாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி, கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. இந்தப் படத்தில்தான் தற்போது டெரர் வில்லனாக சத்யராஜ் நடித்துள்ளார். மேலும் படத்தில் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், கரு சந்திரன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவையும் அவரே மேற்கொண்டுள்ளார். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதை நடிகர்கள் அர்ஜுன், சிபிராஜ், சாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இரண்டு நிமிடங்கள் இடைவெளியில் வெளியாகியுள்ள இந்த டீசரில் முதல் ஒரு நிமிடம் சத்யராஜின் நையாண்டி வசனங்களும் அடுத்து வரும் காட்சிகளில் அவரது வில்லத்தனமான கேரக்டர் அறிமுக காட்சிகளாகவும் அமைந்துள்ளன.

எண்பதுகளில் நாம் பார்த்து ரசித்த சத்யராஜின் வில்லத்தனமான நடிப்பு மற்றும் நக்கலான வசனங்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த வகையில் இந்தப் படம் அவரது அந்த நடிப்பை மீட்டெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை உணர்த்தும் வகையிலேயே தற்போது வெளியாகியுள்ள அங்காரகன் படத்தின் டீசர் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Actor Sathyaraj again acts as a villain in Angaragan movie and the teaser released

வழக்கமாக நரிக்கூட்டத்தை வேட்டையாட சிங்கம்தான் வரும் ஆனால் தற்போது இன்னொரு நரியே வந்திருக்கிறது, எனக்கு கட்சி ஆரம்பித்து ஜனங்களையும் ஏமாத்தவும் தெரியாது, கட்சி ஆரம்பிக்க போறேன்னு சொல்லி ஜனங்களை ஏமாற்றவும் தெரியாது என்பது போன்ற வசனங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த வசனங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் போன்ற படங்களில் வசனங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்திய கருந்தேள் ராஜேஷ் இந்தப் படத்தின் வசனங்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் படத்தின் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்களையும் படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X