Sathyaraj: ரஜினியை ஷாக்காக்கிய சத்யராஜ்.. கூலி பட சூட்டிங்கில் தரமான சம்பவம்!

சென்னை: நடிகர் சத்யராஜ் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பிரபாசுடன் இணைந்து கட்டப்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் சத்யராஜ். இந்தப் படம் அவரை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளது. அடுத்தடுத்த மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தற்போது ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் கூட்டணி இந்தப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங்கில் ரஜினிகாந்துடன், சத்யராஜ் தற்போது இணைந்து நடித்து வருகிறார்கள்.

sathyaraj coolie movie rajinikanth

நடிகர் சத்யராஜ்: நடிகர் சத்யராஜ் பல ஆண்டுகளாக திரைத்துறையில் தன்னை நிலைநிறுத்தி வருகிறார். முதலில் வில்லனாகவே இவரது பயணம் துவங்கிய நிலையில் நூறாவது நாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சத்யராஜ், ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். வில்லனாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து மாஸ் காட்டிய சத்யராஜ், ஒரு கட்டத்தில் அவர்களுக்கே போட்டியாக மாறினார். கடலோர கவிதைகள், வேதம் புதிது என வித்தியாசமான கதைக்களங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்.

ரஜினியுடன் கூட்டணி: இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்துள்ளார் சத்யராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதனிடையே மறுபடியும் ரஜினியுடன் இணைந்தது குறித்து நடிகர் சத்யராஜ் தன்னுடைய பேட்டியொன்றில் உற்சாகம் தெரிவித்துள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் தான் அதிகமாக அரட்டை அடித்ததாகவும் என்ன வொர்க்அவுட் பண்றோம்னு ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக் கொண்டதாகவும் சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியை ஷாக்காக்கிய சத்யராஜ்: இதையடுத்து தனக்கு என்ன வயசு என ரஜினிகாந்த் கேட்டதாகவும் 70 வயது என தான்கூற அதைக்கேட்ட ரஜினிகாந்த் ஷாக்கானதாகவும் சத்யராஜ் மேலும் கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 171வது படமாக கூலி உருவாகி வருகிறது. படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கானும் முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக மே மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை வேடங்களில் சத்யராஜ்: இதனிடையே, சத்யராஜ் தன்னுடைய பேட்டியில் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் சத்யராஜ் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அடுத்ததாக கார்த்தியுடன் வா வாத்தியார் படத்தில் வில்லனாகவும் நடித்து முடித்துள்ளார் சத்யராஜ். இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் தான் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். இதனிடையே சத்யராஜ் மனைவி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் நிலையில், இதுகுறித்தும் சத்யராஜ் தன்னுடைய பேட்டியில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X