கடைசியில் இவருமா? சின்னத்திரைக்கு வந்த நடிகர் சத்யராஜ்..ரசிகர்கள் மிகுந்த ஆர்வம்!
சென்னை : நடிகர் சத்யராஜ் வில்லனாகத்தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஹீரோவாக மாறினார்.
Recommended Video
தற்போது தனது வயதுக்கேற்ற படங்களில் நடித்து வருகிறார். எப்போதுமே நக்கலான விஷயங்களை சிறப்பாக செய்துவரும் சத்யராஜ் காமெடி கேரக்டர்களிலும் கலக்கி வருகிறார்.
பாகுபலி படங்களில் இவர் ஏற்று நடித்த கட்டப்பா கேரக்டர் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

மிரட்டலான வில்லன்
நடிகர் சத்யராஜ் வில்லனாகத்தான் தன்னுடைய கேரியரை சினிமாவில் துவக்கினார். மொட்டை அடித்துக் கொண்டு இவர் ஏற்று நடித்திருந்த கேரக்டர் இவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அந்த நேரத்தில் இவரது இந்த மிரட்டலான வில்லன் கேரக்டருக்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

ஹீரோவாக சத்யராஜ்
தொடர்ந்து ரஜினி, கமல் என வில்லனாக இவர் நடித்தநிலையில், இவரை ரசிகர்கள் கதாநாயகனாகவும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து பல படங்களில் இவர் ஹீரோவாக நடித்தார். ராதா, அம்பிகா என முன்னணி நடிகைகளுடன் டூயட் பாடினார். ஆனாலும் தன்னுடைய நக்கல், நையாண்டி போன்றவற்றை விடவில்லை.

கட்டப்பா கேரக்டர்
அடுத்தடுத்து வில்லனாகவும் ஆன்டி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ். இவரது அமைதிப்படை உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகவும் நல்ல பெயரை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. தற்போது பாகுபலி படங்களில் இவர் ஏற்று நடித்த கட்டப்பா கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வீட்ல விசேஷம் படம்
தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி விரைவில் ரிலீசாகவுள்ள வீட்ல விசேஷம் படத்தில் நடித்துள்ளார் சத்யராஜ். மேலும் இந்தப் படத்தில் ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

சிறப்பான பிரமோஷன்
இந்தப் படத்தின் பிரமோஷன் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஜய் டிவியின் நிகழ்ச்சியிலும் ஆர்ஜே பாலாஜி மற்றும் அபர்ணா கலந்து கொண்டனர். இதனிடையே தொடர்ந்து அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழு திட்டமிட்டுள்ளது. நிகழ்ச்சிகள், பேட்டிகளை தாண்டி மற்றொரு வித்தியாசமான முயற்சியிலும் படக்குழு ஈடுபடவுள்ளது.

சீரியலில் சத்யராஜ்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் வீட்ல விஷேசம் படக்குழுவினர் நடித்துள்ளார்கள். வித்தியாசமான இந்த முயற்சியையடுத்து முதல்முறையாக நடிகர் சத்யராஜ் மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரும் சீரியலில் நடித்துள்ளனர். இதன்மூலம் நடிகர் சத்யராஜும் சீரியலில் நடித்துவிட்டார்.

ரசிகர்கள் மிகுந்த ஆர்வம்
இவரை சின்னத்திரையில் சீரியலில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விரைவில் இந்த எபிசோட் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான இந்த புதிய முயற்சி படத்திற்கு சிறப்பான பிரமோஷனை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











