ரஜினிகாந்த்: கூலி படத்தில் சத்யராஜ்.. டெரரான போஸ்டரை வெளியிட்ட லோகேஷ்.. கேரக்டர் பெயர் என்ன தெரியுமா
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் இணைந்து நடித்துவரும் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினி நடிப்பில் வேட்டையன் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை இன்றைய தினம் ரஜினிகாந்த் துவங்கியுள்ளார். இதன் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டு உற்சாகம் தெரிவித்துள்ளது.
மிகவும் மாஸாக வேட்டையன் படம் ரசிகர்களை கவர தயாராகிவரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கூலி படத்தில் ரஜினிகாந்தை அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் லோகேஷ் இணைத்துள்ளார். படம் ரஜினி கேரியரில் பெஸ்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் இளம் நடிகர்களுக்கு உத்வேகத்தையும் தயாரிப்பாளர்களுக்கு அதிகமான வசூலையும் பெற்றுக் கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுக் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து இளம் இயக்குநர்களுடன் களமிறங்கி வருகிறார் ரஜினிகாந்த். அவரை பொறுத்தவரை, இயக்குநர்களின் ஃபேவரிட் நடிகராக உள்ளார். இயக்குநர்கள் சொல்வதை அப்படியே களத்தில் செயல்படுத்துவார் என்று தொடர்ந்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் ரஜினிகாந்த்.
வேட்டையன் படம்: இந்நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் செப்டம்பர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது வேட்டையன் படம். டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளதாகவும் போலி என்கவுண்டருக்கு எதிரான படமாக இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஜெய் பீம் படத்தின்மூலம் அதிகமான கவனத்தை பெற்ற ஞானவேல், இந்தப் படத்திலும் அதை தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் இன்றைய தினம் துவங்கியுள்ளார்.
கூலி படத்தில் சத்யராஜ்: இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத் என மாறி மாறி எடுக்கப்பட்டு வருகிறது. தங்கக்கடத்தலை மையமாக வைத்து கூலி படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பிரமோ போன்றவை வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.
ராஜசேகராக நடிக்கும் சத்யராஜ்: இந்நிலையில் இன்றைய தினம் சத்யராஜின் என்ட்ரி குறித்து போஸ்டருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். படத்தில் ராஜசேகர் என்ற கேரக்டரில் சத்யராஜ் இணைந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் மொட்டை தலையுடன் கையில் மின் ஒயருடன் மிகவும் டெரரான லுக்கில் சத்யராஜ் காணப்படுகிறார். படத்தில் சத்யராஜ் கேரக்டர் மிகவும் அழுத்தமாக அமையும் என்று இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் மேலும் ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி வருவதாகவும் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக படம் ரிலீசாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











