நயன்தாராவுடன் கனெக்ட் படத்தில் இணைந்த சத்யராஜ்... விறுவிறு சூட்டிங்
சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்சின் அடுத்த தயாரிப்பு கனெக்ட்.
இந்தப் படத்தை அஸ்வின் சரவணன் இயக்கிவரும் நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் படத்தில் தற்போது முன்னணி நடிகர் இணைந்துள்ளது குறித்து படத்தின் இயக்குநர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது என்று அடுத்தடுத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி பிக்சர்ஸ்
சமீபத்தில் ஓடிடியில் வெளியான நெற்றிக்கண் படத்தை தயாரித்திருந்த ரவுடி பிக்சர்ஸ், தொடர்ந்து கூழாங்கல், ராக்கி படங்களின் வெளியீட்டு உரிமையையும் ரவுடி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. இதனிடையே ராக்கி படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனெக்ட் படம்
இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கதில் புதிய படத்தை ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ஹாரர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த மாதத்தில் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி வெளியாகி வரவேற்பை பெற்றன.

சூட்டிங்கில் பங்கேற்ற சத்யராஜ்
கனெக்ட் என்று இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் சத்யராஜ், அனுபம் கெர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் சத்யராஜ் படக்குழுவினருடன் இணைந்துள்ளார்.

அஸ்வின் சரவணன் மகிழ்ச்சி
இதுகுறித்து படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். சிறப்பான நடிகரான சத்யராஜுடன் இணைந்து பணியாற்ற தான் எப்போதுமே விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video

மாயா பட இயக்குநர்
தன்னுடைய கனவு படமான கனெக்டில் அவர் இணைந்துள்ளது மேலும் மகிழ்ச்சியை அதிகரித்துள்ளதாகவும் அஸ்வின் சரவணன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் சிறப்பாக அமைந்திருந்தன. முன்னதாக நயன்தாராவின் மாயா படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











