Sathya raj: இதுல என்ன தயக்கம்.. ஹீரோவா நடிக்காததுக்கு இதுதான் காரணம்.. சீக்ரெட் சொன்ன கட்டப்பா!
சென்னை: நடிகர் சத்யராஜ் வில்லனாக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்பு ஹீரோவாக மாஸ் காட்டியவர். ஒரு கட்டத்தில் தன்னுடைய வயதிற்கு ஏற்ற கேரக்டர்களை ஏற்று நடித்த சத்யராஜ், தற்போதும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். நக்கல் மற்றும் நையாண்டிக்கு பெயர்போன சத்யராஜ் தற்போதும் அதேபோன்ற கேரக்டர்களிலும் சீரியசான கேரக்டர்களிலும நடித்து வருகிறார்.
படங்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் லீட் கேரக்டர்களில் இவர் நடித்து வருகிறார். சமீபத்தில் சீதா உள்ளிட்டவர்களுடன் சத்யராஜ் இணைந்து நடித்திருந்த மை பர்ஃபெக்ட் ஹஸ்பெண்ட் வெப் தொடர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அடுத்ததாக மரகத நாணயம் 2 படத்திலும் சத்யராஜ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சத்யராஜ்: நடிகர் சத்யராஜ் பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது பான் இந்தியா ஸ்டாராகவும் இவர் மாறியுள்ளார். பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கேரக்டர் இவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. முதல் பாகத்திலும் இரண்டாவது பாகத்திலும் இவரது கேரக்டருக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் சர்வதேச அளவிலான வெற்றியே சத்யராஜை பான் இந்தியா ஸ்டாராக கொண்டாட வைத்து வருகிறது. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் சத்யராஜ்.
வெப் தொடரில் சத்யராஜ்: சமீபத்தில் சீதாவுடன் இணைந்து இவர் நடித்திருந்த மை பர்ஃபெக்ட் ஹஸ்பெண்ட் வெப் தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. அடுத்ததாக மரகதம் நாணயம் 2 படத்தில் கமிட்டாகியுள்ள சத்யராஜ் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதுடன் மட்டுமில்லாமல் தான் நினைக்கும் கருத்துக்களை பொதுவெளிகளில் தைரியமாக சொல்லும் வழக்கத்தையும் கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் கொடுத்த பேட்டி ஒன்று தான் ஹீரோவிலிருந்து கேரக்டர் ரோல்களுக்கு ஏன் மாறினேன் என்பது குறித்த விளக்கமாக அமைந்துள்ளது. தான் ஹீரோவாக நடித்த அடுத்தடுத்து 10 படங்கள் தோல்வியை கண்டதாக சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஹீரோ டூ கேரக்டர் ரோல்கள்: இதனிடையே கேரக்டர் ரோல்களில் நடிக்க அதிக காசு கொடுப்பதாக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முன்வந்ததாகவும் அதனால் தான் கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்ததாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இதை சொல்வதற்கு தனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என்றும் சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார். கேரக்டர் ரோல்களிலும் தனக்கேயுரிய தனித்துவமான நடிப்பை கொடுத்து வருகிறார் சத்யராஜ். அவரது நக்கல் மற்றும் நையாண்டியையும் விடாமல் தொடர்ந்து வருகிறார். சில நேரங்களில் சீரியஸ் களங்களிலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.
சத்யராஜ் திரைப்பயணம்: வில்லனாகவே தன்னுடைய கேரியரை துவங்கினார் சத்யராஜ். நூறாவது நாள் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து மிகப்பெரிய அதிரடியை இவர் ஏற்படுத்தினார். ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு இவர் வில்லனாக நடித்துள்ளார். தன்னுடைய வில்லன் நடிப்பில்தான் இவர் நையாண்டியை புகுத்தினார். தொடர்ந்துதன்னுடைய நண்பர் மணிவண்ணனுடன் இணைந்து 1987 முதல் 1994 வரை அடுத்தடுத்து 12 வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர்களின் கூட்டணி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











