twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் இருந்து வெளியேறிய சத்யராஜ் - காரணம் இதுதான்

    |

    சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நடிகர் சத்யராஜ் விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் அதிலிருந்து திடீரென்று விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் மொத்தமாக 6 மாத கால்ஷீட்டை வழங்கியதாக கூறப்பட்ட நிலையில் அவர் விலகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் காட்சி வடிவில் மாற்ற இறங்கியுள்ளார். மிகுந்த பொருட் செலவில் உருவாகவுள்ள இதை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான வேலையில் அவர் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அதற்கான காலம் கனிந்துவிட்டது. தற்சமயம் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகின்றன.

    இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் தேர்வு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. அது தற்போது தான் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் அடர்ந்த காடுகளில், வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க விருப்பதாகத் தகவல் வெளியானது.
    இந்த நிலையில் சத்யராஜ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வரலாற்று காவியங்கள்

    வரலாற்று காவியங்கள்

    தென்னிந்திய சினிமாவில் நம்மைவிட பின் தங்கியிருந்த தெலுங்கு படவுலகில், அருந்ததி, ருத்ரமாதேவி, மஹதீரா, பாகுபலி போன்ற வரலாற்று திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு அவை வசூலிலும் வெற்றி வாகை சூடியபோது, தமிழ் ரசிகர்கள் அதை ஏக்கத்துடனேயே பார்த்துக்கொண்டிருந்தனர். அதிலும் பாகுபலி இரண்டு பாகமும் சேர்ந்து 1200 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கின்றனர். நம்முடைய தமிழ் சினிமாவில், எப்போது தான் அந்த மாதிரியான வரலாற்று காவிய படைப்புகள் படமாக்கப்படும் என்று ஏங்கினர். வெறுமனே கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை மட்டுமே கதை என்று நம்பி 300 கோடி 500 கோடி பட்ஜெட்டில் படமெடுத்து வெளியிட்டு, போட்ட பணத்தை ஒரே வாரத்தில் வசூல் செய்வது மட்டுமே மகத்தான சாதனை என்று மார்தட்டிக்கொண்டு வருகின்றனர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.

    கொட்டிக்கிடக்கும் வரலாற்று நாவல்கள்

    கொட்டிக்கிடக்கும் வரலாற்று நாவல்கள்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்தை பார்த்தபோது, தமிழ் ரசிகர்களின் மனக்குமுறல் இன்னும் அதிகரித்துவிட்டது. நம்மிடம் இல்லாத வரலாற்று காவியப் படைப்புகளா என்ன. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற நாவல்களும், அமரர் சாண்டில்யன் எழுதிய கடல் புறா, யவன ராணி, ஜல தீபம், கன்னி மாடம், ராஜ முத்திரை. கோவி மணிசேகரன் எழுதிய நாவல்கள் என எத்தனையோ வரலாற்று புதினங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

    20 பாகமாக எடுக்கலாம்

    20 பாகமாக எடுக்கலாம்

    அதிலும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க நினைத்தால் 20 பாகமாகக் கூட எடுக்கலாம். ஆனால் யாருக்குமே மனம் வரவில்லை என்று தான் ரசிகர்கள் குமுறுகிறார்கள். ரசிகனின் குமுறல் மட்டுமல்ல, தமிழ் மொழியை காதலிக்கும் ஒவ்வொரு நடிகனுக்கும் அந்த தீராத ஏக்கம் இருக்கிறது என்பது தான் உண்மை.

    பி.ஆர்.பந்துலு, ஏ.பி.நாகராஜன்

    பி.ஆர்.பந்துலு, ஏ.பி.நாகராஜன்

    அவர்கள் அனைவரும் நினைப்பது, இன்றைய வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப யுகத்தில், நம் தமிழ் சினிமாவில், பி.ஆர்.பந்துலு, ஏ.பி.நாகராஜன் போன்ற இயக்குநர்கள் இருந்தார்கள் என்றால், இன்னுமா விட்டுவித்திருப்பார்கள், எத்தனையோ வரலாற்று கதைகளை படமாக எடுத்திருப்பார்கள் என்று தான். அமரர் எம்.ஜி.ஆரின் நிறைவேறாத ஆசையில் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான். அந்த ஏக்கத்தை தற்போது இயக்குநர் மணிரத்னம் நிறைவேற்ற முன்வந்துள்ளதாகவே தமிழ் ரசிகர்களுக்கு தோன்றுகிறது.

    மணிரத்னம் ரெடி

    மணிரத்னம் ரெடி

    மணிரத்னம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர். இவர் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர். இவரின் மிக முக்கிய படங்களாகக் கருத படுவது மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பாம்பே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, குரு போன்றவை.

    பொன்னியின் செல்வன் கனவு படம்

    பொன்னியின் செல்வன் கனவு படம்

    இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் பல மேடைகளில் தன்னுடைய கனவாய் சொல்வது பொன்னியின் செல்வன் கதையை படமாக்குவது பற்றித்தான்.

    ப்ரீ புரொடக்ஷன் வேலை

    ப்ரீ புரொடக்ஷன் வேலை

    மணிரத்னம் பல வருடங்களாக இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது இதற்கான காலம் கனிந்துவிட்டது. நாவல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் வரலாற்று கதை பொக்கிஷமான பொன்னியின் செல்வன் கதை படமாகிறது. இதற்கான வேலைகள் மற்றும் ப்ரீ புரடக்ஸன் பணிகள் போய் கொண்டு இருக்கின்றன.

    நட்சத்திர பட்டாளம் தயார்

    நட்சத்திர பட்டாளம் தயார்

    இதற்கிடையில், இந்தப்படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் பற்றி சில தகவல்கள் இதற்கு முன்பே வெளியாகி இருந்த நிலையில் மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைய உள்ளது. நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சத்யராஜ், ஜஸ்வர்யா ராய், அமலா பால், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    ஐஸ்வர்யா ராய்

    ஐஸ்வர்யா ராய்

    இதில் ஐஸ்வர்யா ராய் 'நந்தினி மற்றும் நந்தினியின் தாயாரான மந்தாகினி தேவி கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இது தவிர சுந்தர சோழனாக அமிதாப் பச்சன், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், மற்றும் குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கதாநாயகர்கள் அனைவருமே தலை முடியை நீளமாக வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆறு மாதம் கால்ஷீட்

    ஆறு மாதம் கால்ஷீட்

    இந்த படத்திற்காக மணிரத்னம் விதித்த நிபந்தனை காரணமாக சத்யராஜ் வெளியேற உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்காக ஆறு மாதங்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும் கால்ஷீட் காலத்தில் வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்று மணிரத்னம் கூறியுள்ளார். எனவேதான் சத்யராஜ் வெளியேறிதாக கூறப்படுகிறது.

    கட்டப்பா சம்மதிப்பாரா

    கட்டப்பா சம்மதிப்பாரா

    இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தாலும் அவருக்கு பதிலாக வேறு யாரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறது. அதேநேரம் இப்படத்தில் நடிக்க சத்தியராஜை சம்மதிக்க வைக்கும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது. பாகுபலி படத்தில் கட்டப்பா வேடத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தவர் சத்யராஜ் என்பதால் எப்படியாவது இப்படத்தில் அவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறது. கட்டப்பா சம்மதிப்பாரா பார்க்கலாம்.

    English summary
    Director Mani Ratnam is preparing to film 'Ponniyin Selvan' historical story. He has been heavily involved in the work.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X