ஹாட் அப்டேட். சூர்யாவின் 40வது படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. வேற லெவல் தான் போங்க!
சென்னை: நடிகர் சூர்யாவின் 40வது படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 40வது படத்தின் விரைவில் தொடங்கவுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

சூர்யா 40ல் சத்யராஜ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள சூர்யாவின் 40வது படத்தில் பன்முகம் கொண்ட நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Suriya40BySunPictures, #Suriya40 போன்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி நடிப்பில் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில், கார்த்தியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார் சத்யராஜ். மீண்டும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சத்யராஜ் இணைந்துள்ளது சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பாகுபலி கட்டப்பா
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பல சூப்பரான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து கலக்கி வருகிறார் நடிகர் சத்யராஜ். இயக்குநர் ராஜமெளலியின் பாகுபலி படத்தில் கட்டப்பா வேடத்தில் நடித்து அசத்திய சத்யராஜ் தொடர்ந்து ஏகப்பட்ட சூப்பரான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருகிறார். சூர்யா 40 படமும் சத்யராஜுக்கு சிறப்பான ரோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுப்பான ரசிகர்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும் அதனை தொடர்ந்து சூர்யா 40 படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தளபதி 65 படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகவில்லையே என விஜய் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











