twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவரில்லைன்னா நான் இல்லை...சத்யராஜ் வெளியிட்ட உருக்கமான வீடியோ

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த டைரக்டர்களில் ஒருவர் மணிவண்ணன். 1980 களில் இயக்குனர் பாரதிராஜாவிடம் கதை மற்றும் வசனம் எழுதுபவராக சேர்ந்தவர் மணிவண்ணன். பிறகு படிப்படியாக வளர்ந்து தானே டைரக்டரானார்.

    குக் வித் கோமாளி பாலா காமெடியில் மட்டுமல்ல படிப்பிலும் டாப்பர்... வைரலாகும் மார்க் புகைப்படம்! குக் வித் கோமாளி பாலா காமெடியில் மட்டுமல்ல படிப்பிலும் டாப்பர்... வைரலாகும் மார்க் புகைப்படம்!

    டைரக்டர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா என கிட்டதட்ட 400 படங்களில் பணியாற்றி உள்ளார் மணிவண்ணன். சுமார் 50 படங்களை இயக்கி உள்ளார். மணிவண்ணனின் படங்களில் அரசியல் தாக்கம் அதிகம் இருக்கும்.

    நையாண்டி அரசியலால் பிரபலம்

    நையாண்டி அரசியலால் பிரபலம்

    குணசித்திர நடிகர், காமெடி, வில்லன் என பல ரோல்களில் நடித்துள்ளார் மணிவண்ணன். சத்யராஜுடன் இணைந்து மணிவண்ணன் நடித்த அமைதிப்படை எவர்க்ரீன் பிளாக்பஸ்டர் படம். பல அரசியல் நையாண்டி படங்களை இயக்கிய மணிவண்ணன் 2013 ம் ஆண்டு ஜுன் மாதம் மாரடைப்பால் காலமானார்.

    சத்யராஜின் உருக்கமான வீடியோ

    சத்யராஜின் உருக்கமான வீடியோ

    மணிவண்ணனின் 8 ம் ஆண்டு நினைவு நாளில் அவரை பற்றி உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சத்யராஜ். மணிவண்ணனும், சத்யராஜும் மிக நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

    அவரில்லைனா நான் இல்லை

    அவரில்லைனா நான் இல்லை

    மணிவண்ணன் பற்றி சத்யராஜ் கூறுகையில், மணிவண்ணன் இல்லைன்னா சத்யராஜ் இல்லை. இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் மணிவண்ணன் நினைவு நாள் தான். மணிவண்ணன் தான் நம்முடன் இல்லை. அவரது நினைவுகள் இருந்து கொண்டே தான் உள்ளது.

    மணிவண்ணன் இருந்து கொண்டே இருப்பார்

    மணிவண்ணன் இருந்து கொண்டே இருப்பார்

    விஜய் நடித்த மாஸ்டர் படம் ஆகட்டும், தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படமாகட்டும் அத்தனையிலும் மணிவண்ணனின் வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது. அவரின் பிரதிபலிப்பு உள்ளது. மணிவண்ணனை மக்களின் மனங்களில் இருக்க வைத்ததற்கு நன்றி என்றார்.

    அமைதிப்படை அமாவாசை

    அமைதிப்படை அமாவாசை

    அமைதிப்படை படத்தில் அமாவாசை கேரக்டரில் தான் நடித்தது பற்றியும், அப்போது நடந்த சம்பவங்கள் பற்றியும் மிக உணர்ச்சி பூர்வமாக சத்யராஜ் பேசி இருந்தார். அமைதிப்படை படத்தில் தான் பேசிய பிரபல டயலாக்கான, சோழர் பரம்பரையில் ஓர் எம்எல்ஏ என்பதை பிரதிபலிப்பதாக ஜகமே தந்திரம் படத்தில் சோழர் பரம்பரையில் ஒரு தாதா என தனுஷ் பேசி உள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Sathyaraj released a rather emotional video. In which, he said there is no Sathyaraj without Manivannan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X