அடுத்தடுத்து படங்கள் பிளாப்.. மார்க்கெட் போச்சு..சத்யராஜ் மனம் திறந்த பேட்டி!

சென்னை: நான் கடைசியாக ஹீரோவாக நடித்த 10 படங்கள் சரியாக போகவில்லை, இதனால், கேட்ட சம்பளத்தை தரமாட்டாங்க, கொடுத்த அட்வான்சையும் திருப்பி வாங்கிட்டு போயிடுவாங்க, மார்க்கெட் போனதால், குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வந்தான் என்று சத்யராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

1980, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கிய சத்யராஜ், தற்போதும் பிஸியான நடிகராக வலம் வருகிறார். அமைதிப்படை படத்தில் வரும் அமாவசை போன்ற நக்கலான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடத்தார் சத்யராஜ். பொது நிகழ்ச்சிகளிலும் அதே ஸ்டைலில் பேசுவது வழக்கம். வில்லன் , ஹீரோ, காமெடி, தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையை வெளிப்படுத்திய நடிகர் சத்யராஜ். தமிழ் சினிமாவில் நாற்பதைந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சத்யராஜ், தெலுங்கு, மலையாளம் , தமிழ் என அனைத்து மொழிகளிலும் மொத்தம் 240க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Actor Sathyaraj interview

மார்க்கெட் போச்சு: நான் கடைசியாக ஹீரோவாக நடித்த 10 படங்கள் சரியாக போகவில்லை, பிஸ்னஸ் ஆகவில்லை. ஒரு படம் வெற்றிப்பெறவில்லை என்றால் ஹீரோதான் பொறுப்பு, இதனால், கேட்ட சம்பளத்தை தரமாட்டாங்க, அட்வான்ஸ் கொடுப்பாங்க, படம் ரிலீஸ் ஆகும் போது, அதற்கு காசு இல்ல, இதற்கு காசு இல்லை என்று, கொடுத்த காசையும் வாங்கிட்டு போய்விடுவார்கள். அதற்கு காரணம் நல்ல கதைகளை நான் சரியாக தேர்வு செய்யாததால், மார்க்கெட் போய்விட்டது.

தாக்குபிடிக்க முடியல: அது மட்டுமில்லாமல், நான் ஹீரோவாக நடித்த நேரத்தில், அஜித், சூர்யா, விஜய் என பல இளம் நடிகர்கள் நடிக்க வந்தார்கள். அவர்களின் படங்கள் ஓடின. அந்த நேரத்தில் என்னால், அவர்களோடு தாக்குபிடிக்க முடியவில்லை. இதனால், 2008ம் ஆண்டுக்கு பிறகு, இந்த நேரத்தில் நல்ல, குணசித்திர கேரக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது உடனே மாறிவிட்டேன்.

தொடர்ந்து பேசிய அவர், நான் அறிமுகம் ஆனது என்னவோ வில்லன் தான். ஆனால், அதன் பிறகு நடிகன், என் பொம்ம குட்டி அம்மாவுக்கு என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து ஹீரோவாகிவிட்டேன். ஹீரோ வில்லன் என இரண்டு கேரக்டரிலும் நடித்தால், இரண்டு படமும் ஒரே நேரத்தில் வெளியாகி அது தயாரிப்பாளருக்கு பிரச்சனையாகிவிடும் என்பதால், வில்லனாக நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சத்யராஜ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

மழைப்பிடிக்காத மனிதன்: தற்போது சத்யராஜ், நடிப்பில் வெப்பன், மழை பிடிக்காத மனிதன் படங்கள் வெளியாகவுள்ளன. விஜய் ஆண்டனியுடன் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்துள்ளனர். முக்கியமாக கேப்டன் விஜயகாந்த் நடிக்க வேண்டிய கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X