வள்ளல் படம் ரிலீஸாக காரணமே விஜயகாந்த் தான்.. நடிகர் சிபிராஜ் பேட்டி!
சென்னை: விஜயகாந்த அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சத்யராஜின் மகன் சிபிராஜ் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் இருந்து விலகினார். அரசியலிலும் சினிமாவிலும் மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தை பிடித்த விஜயகாந்த் தொடர்ந்து மக்கள் நலப்பணியில் ஈடுபட்டு வந்தார். விஜயகாந்தை வெறுப்பவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்கு அவர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்தார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. பின் உடல் நலம் பெற்ற விஜயகாந்த் வீடு டிசம்பர் 14ந் தேதி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பிரேமலதா பொதுச்செயலாளர் ஆனார்.
முழு அரசு மரியாதை: இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் வியாழக்கிழமை காலை விஜயகாந்த் உயிரிழந்தார்.அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது. விஜயகாந்தின் மறைவு அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக பிரேமலதா தெரிவித்து இருந்தார்.
சிபிராஜ் அஞ்சலி: விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சத்யராஜின் மகன் சிபிராஜ் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசி சிபிராஜ். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு தான். ரொம்ப தைரியமான மனிதர் அனைவர் இடத்திலும் ரொம்ப பாசமா இருப்பாரு.
வெளிப்படையான மனிதர்: எனது தந்தையின் வள்ளல் படத்திற்கு அவ்வளவு பிரச்சனை இருந்தது. அப்போ கூட நின்று படம் ரிலீஸ் ஆக மிக முக்கியமான காரணமே விஜயகாந்த் தான். நான் சினிமாவிற்கு வந்த புதிதில் என் படத்தை பார்த்து விட்டு, வீட்டிற்கு அழைத்து நிறைய அறிவுரை கூறினார். மனதில் நினைப்பதை ரொம்ப போல்டா வெளிப்படையாக பேசக்கூடிய ஒருவராக விஜயகாந்த் இருந்தார். இன்று அவர் இல்லை என்பதை மனசு ஏற்க மறுக்கிறது. இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சிபிராஜ் அந்த பேட்டியில் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











