நடிகர் விஜய் இளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரம்..சத்யராஜ் பேச்சு!
சென்னை: நடிகர் விஜய் இளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பதாக நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார்.
நடிகர் விஜய், நேற்று முன்தினம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கினார்.
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சால்வை அணிவித்து சான்றிதழ்களை கொடுத்தார்.

விஜய் பேச்சு: இந்த நிகழ்ச்சியில்பேசிய விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜர் என அனைத்து தலைவக்ள் பற்றியும்படியுங்கள்,நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நம்ம விரலைவெச்சு நம்ம கண்ணையே குத்துற வேலைதான் நடந்துக்கிட்டிருக்கு. அதைத்தான் நாமும் செய்துகொண்டிருக்கிறோம். அதாவது, காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுறது என்று பல நல்ல விஷயங்களை பேசி இருந்தார்.
சத்யராஜ் பேச்சு: கோவையில் தனியார் அழகு நிலையத்தை திறந்துவைத்த சத்யராஜ்,தோழர் கௌசல்யா அவர்களின் அழகு நிலையத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன். கௌசல்யா ஒரு தைரியமான, பெண் என்பது ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். பெண்கள் அனைவரும் எப்படி இருக்க வேண்டும், பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம் என்றார்.

இளைய தலைமுறையின் நம்பிக்கை: அப்போது செய்தியாளர் ஒருவர், விஜய் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்த காரணம் அரசியலுக்கு வரும் முயற்சியா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த சத்யராஜ், மாணவ. மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில், நடிகர் விஜய் செய்தது மிகவும் நல்ல விஷயம். அரசியலுக்கு வருவது பற்றி அவரே வெளிப்படையாக சொல்லாதபோது நான் அது குறித்து பேசுவது நன்றாக இருக்காது. மேலும், அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிக்க வேண்டும் என்று விஜய் சொன்னது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரது கருத்தை வரவேற்கிறேன். அவர் இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் என்றார்.
நடிப்பு வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு: மேலும், லியோ பட போஸ்டரின் விஜய் புகைபிடிப்பது போன்ற போஸ்டர் போன்ற புகைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சத்யராஜ்,, நடிகர்கள் தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டியுள்ளது. நான் இப்போது வில்லனாக நடித்திருக்கும் ஒரு படத்தில் கூட புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. மக்கள் என் பக்கம் என்ற படத்தில் நான் ஒரு கடத்தல்காரராக நடித்திருப்பேன். நடிப்பு வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்றார்.:


Click it and Unblock the Notifications











