'40 வருஷமா நான் சொன்ன பொய்'... மரண கலாய் கலாய்த்த சத்யராஜ்!
கனா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், கடந்த 40 வருடங்களாக ப்ரிவியூ தியேட்டர் வாசலில் தான் சொன்ன பொய்களுக்கு அளவே இல்லை என்றார்.
Recommended Video

சென்னை: கனா படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது, நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவை கேலி செய்து பேசியது சிரிப்பை வரவழைத்தது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில், சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அவருடைய தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.
இப்படம் வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், கடந்த 40 வருடங்களாக ப்ரிவியூ தியேட்டர் வாசலில் தான் சொன்ன பொய்களுக்கு அளவே இல்லை என்றார்.

மாற்றி மாற்றி பாராட்டு:
இதுகுறித்து அவர் பேசியதாவது, "பொதுவாக சினிமா நிகழ்ச்சிகளில் ஒரு படத்தை பற்றி பேசும் போது ஒருவரையொருவர் மாறி மாறி பாராட்டிக்கொள்வோம். அதுவும் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஒரு பட புரோமோஷன் நிகழ்ச்சியில், ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பாராட்டும் போது, அந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருப்பவர் சேனலை மாற்றிவிடுவார்.

யோசனை:
அதுவும் ப்ரிவியூ தியேட்டரில் ஒரு படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது பொய் சொல்ல வேண்டியிருக்கும். அதற்காக படம் முடியும் முன்பே என்ன பொய் சொல்லலாம் என யோசிக்க தொடங்கிவிடுவேன். இதுபோல் கடந்த 40 ஆண்டுகளில் நான் சொன்ன பொய்களுக்கு அளவே இல்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ்:
கனா படத்தை பொறுத்த வரை ஐஸ்வர்யா ராஜேஷ் நிஜ கிரிக்கெட் வீராங்கனை போலவே நடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த நிஜ கிரிக்கெட் வீராங்களைகளுக்கும் அவருக்கும் வித்தியாசமே தெரியவில்லை.

இயக்குநருக்கு நன்றி:
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டைவிட்டு வெளியே வரும் போது, அவருக்கு பின்பக்கம் பெரியார் படத்தை வைத்திருப்பார்கள். அதற்காக இயக்குனர் அருண்ராஜா காமராஜுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தங்கல் படத்தைப் போல் இந்த படமும் சீனாவில் ஜெயிக்க வேண்டும்", என வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











