Sathyaraj: இயக்கம் இல்லாமல் 4 ஆண்டுகளாக இருக்கும் சத்யராஜ் மனைவி.. திவ்யா வெளிப்படுத்திய உண்மை!

சென்னை: நடிகர் சத்யராஜ் பல ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து பிஸியான நடிகராகவே செயல்பட்டு வருகிறார். அவருடன் நடித்த நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் ஹீரோவாகவே தங்களது பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆயினும் சத்யராஜ் தன்னுடைய வயதிற்கு ஏற்ற கேரக்டர்களை சிறப்பாக ஏற்று நடித்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் கவனத்தைப் பெற்று வருகின்றன.

படங்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் சத்யராஜ். சமீபத்தில் இவரது மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் வெப் தொடர் அதிகமான கவனத்தை பெற்றது. இதில் சீதாவிற்கு ஹஸ்பண்டாக நடித்திருந்தார் சத்யராஜ். சத்யராஜுக்கு சிபிராஜ் மற்றும் திவ்யா என மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் இவரது மனைவி குறித்த எந்தவிதமான விவரங்களும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தன்னுடைய அம்மா குறித்து திவ்யா வெளிப்படுத்தியுள்ளார்.

sathyaraj maheswari divya

நடிகர் சத்யராஜ்: நடிகர் சத்யராஜ் கமல்ஹாசன். ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். ஹீரோவாகவும் கடலோர கவிதைகள் உள்ளிட்ட பல படங்களில் கெத்துக் காட்டியவர். பல வெற்றி படங்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர். 80களில் மிகவும் பிஸியான ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போதும் பிஸியாகத்தான் இருக்கிறார். ஆனால் தற்போது பான் இந்தியா ஸ்டாராக அடுத்தடுத்த மொழிகளிலும் இணைந்து நடித்து வருகிறார். தன்னுடைய வயதிற்கு ஏற்ற கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் இவரை சிறப்பான கேரக்டர்களில் பார்க்க முடிகிறது.

அடுத்தடுத்த படங்கள்: சமீபத்தில் சீதா, ரேகா உள்ளிட்டவர்களுடன் இணைந்து சத்யராஜ் நடித்த மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் வெப் தொடர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் சத்யராஜ். சத்யராஜுக்கு சிபிராஜ் மற்றும் திவ்யா என மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் சிபிராஜ் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். தேர்ந்தெடுத்த படங்களில் அடுத்தடுத்து ஹிட்களை கொடுத்து வருகிறார். மகள் திவ்யா சினிமாவில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்ற போதிலும் ஊட்டச்சத்து நிபுணராக அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

sathyaraj maheswari divya

கோமாவில் சத்யராஜ் மனைவி: சமீபத்தில் இவர் அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் திவ்யா தன்னுடைய அம்மா குறித்து தெரிவித்துள்ள விஷயங்கள் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடைய அம்மா மகேஸ்வரி கோமாவில் இருப்பதாக திவ்யா தெரிவித்துள்ளார். மூளைக்கு செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக அவர் கோமாவிற்கு சென்று விட்டதாகவும் PEG tube மூலமாகத்தான் அவருக்கு உணவு கொடுக்கப்பட்டு வருவதாகவும் திவ்யா தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடைய அப்பா சிங்கிள் பேரண்டாக தங்களுக்கு கை கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நம்பிக்கையுடன் குடும்பத்தினர்: இதேபோல தானும் தன்னுடைய அப்பாவிற்கு சிங்கிள் மதராக இருப்பதாகவும் திவ்யா தெரிவித்துள்ளார். தானும் அப்பாவும் இணைந்து பவர்புல்லான சிங்கிள் பேரண்ட் கிளப்பை உருவாக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய அம்மாவின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் தங்களது குடும்பம் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X