சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய பிரபலங்களைத் தொடர்ந்து... வெப் சிரீஸுக்கு வந்த பிரபல நடிகர்!

By

சென்னை: நடிகைகள் சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரை தொடர்ந்து முன்னணி நடிகரும் வெப் சீரிஸில் நடிக்க வந்துள்ளார்.

பிரபல இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் வெப்சீரிஸ் பக்கம் இப்போது கவனம் திருப்பி வருகின்றனர்.

முன்னணி நடிகைகளான, சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பெரும்பாலான நடிகைகள் இதில் நடித்து வருகின்றனர்.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் உட்பட சில நிறுவனங்கள் இதைத் தயாரித்து வருகின்றன. ஏற்கனவே, இந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடர் வெளியானது. அதை அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகிய நான்கு பிரபல இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். பின்னர் இவர்களே கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற தொடரை இயக்கி இருந்தனர்.

கவுதம் வாசுதேவ் மேனன்

கவுதம் வாசுதேவ் மேனன்

இந்தியில் வெப் தொடர்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இங்கும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற வெப்சீரிஸை இயக்க இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், கிடாரி பிரசாந்த் இணைந்து, ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை வெப் சீரிஸாக இயக்கி இருந்தனர்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

இதையடுத்து இயக்குனர்கள் வெற்றிமாறன், கவுதவ் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு உட்பட பலர் வெப் தொடர்களை இயக்குகின்றனர். வெங்கட்பிரபுவின் வெப்சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மற்றும் நடிகை கயல் ஆனந்தி, நடிகர் வைபவ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது.

த பெர்பெக்ட் ஹஸ்பண்ட்

த பெர்பெக்ட் ஹஸ்பண்ட்

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த தொடரை தாமிரா இயக்குகிறார். இவர், ஏற்கனவே பாரதிராஜா, பாலசந்தர் நடித்த ரெட்டைச்சுழி, சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த ஆண்தேவதை படங்களை இயக்கியவர். இவர் இயக்கும் தொடருக்கு, த பெர்பெக்ட் ஹஸ்பண்ட் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் சத்யராஜ் லீட் ரோலில் நடிக்கிறார். மற்றும் சீதா, சுகன்யா, லிவிங்ஸ்டன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X