மகள் திமுக.. மகன் விஜய் கட்சியா? ஒரே வீட்டில் இப்படியா? சத்யராஜ் வீட்டில் நடப்பது என்ன?

சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அண்மையில் பாஜகவில் இணையப்போவதாக இணையத்தில் செய்திகள் பரவிய நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென திமுகாவில் இணைந்துள்ளார். சத்யராஜின் மகள் திமுகவில் இணைந்து இருக்கும் நிலையில் மகன் சிபிராஜ் விஜய்யின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வலம் வந்த நடிகர் சத்யராஜ் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பெரியாரின் கருத்தால் ஈர்க்கப்பட்ட சத்யராஜ், பல மேடைகளில் அந்த கருத்தை தைரியமாக முன்வைத்து பேசி இருக்கிறார். இவரின் மகளான திவ்யா, சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்த இவர், ஸ்டாலினை அண்ணா அறிவாலையத்தில் சந்தித்து நேரில் திமுகவில் இணைந்தார்.

sathyaraj sibiraj vijay party

சத்யராஜின் மகள்: இதையடுத்து பேசிய அவர், மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை, திமுக பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி. நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். நான் எப்போதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். திமுக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. அதற்கு முக்கிய உதாரணமாக காலை உணவுத் திட்டம். அதேபோல் திமுக பெண்களுக்கு மரியாதை அளிக்கும் கட்சி. அதற்கு புதுமைப் பெண் திட்டம். அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியும் திமுக தான் என்றார்.

sathyaraj sibiraj vijay party

பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி: சத்யராஜின் மகள் திமுகவில் இணைந்து இருக்கும் நிலையில், சத்யராஜின் மகனான சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயின் போட்டோக்களை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் சிபிராஜ், தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருக்கிறாரா என்கின்ற பேச்சு எழுந்திருக்கிறது. ஒரே வீட்டில் மகள் திமுகவிலும், மகன் சிபிராஜ் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையப்போகிறாரா என்றும், அதற்காகத்தான் அந்த போட்டோவை பதிவிட்டுள்ளாரா என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழ சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்போதில் இருந்தே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

sathyaraj sibiraj vijay party

சிபிராஜ்: நடிகர் சிபிராஜ், ஸ்டூடண்ட் நம்பர் 1 என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து அப்பாவுடன் சேர்ந்து வெற்றிவேல் சக்திவேல்,கோவை பிரதர்ஸ் என்ற படத்தில் நடித்தார். எந்த படம் வந்தாலும் அதில் நடிக்காமல், நல்ல கதை அம்சம் உள்ள படத்தை தேர்வு செய்து நடித்து வரும் சிபிராஜ் தற்போது, இளையராஜா கலியப்பெருமாள் இயக்கத்தில் டென் ஹவர்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

sathyaraj sibiraj vijay party

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X