கில்லியில் அந்த கேரக்டரே இல்ல.. விஜய்க்காக கதையை மாற்றிய தயாரிப்பாளர்!

சென்னை: விஜய் நடித்த கில்லி திரைப்படம் 20 வருடத்திற்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த படத்தை இன்றைய இளம் தலைமுறையினர் கொண்டாடி வரும் நிலையில், கில்லி படம் குறித்த சுவாரசியத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கில்லி படத்தில் தங்கை கேரக்டரே இல்லை விஜய்க்காக மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் அப்பா, மகன் என இரண்டுவிதமான கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Actor Satish Stephen has said in an interview that there is no sister character in Ghilli

கில்லி: தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருக்கும் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக கில்லி அமைந்தது. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான படம் 2004 ஏப்ரல் 17ம் தேதி வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்தது. இதில், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், தாமு,விமல் என பலர் நடித்திருந்தனர்.

வசூலை அள்ளி வருகிறது: 20 வருடத்திற்கு முன் வசூலை அள்ளிய கில்லி திரைப்படம், ஏப்ரல் 20ந் தேதி உலகம் முழுவதும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சேர்த்து, இப்படம் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. கில்லி ரீ ரிலீசை விஜய்யின் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.‌ அப்படி போடு, அர்ஜுனரு வில்லு ஆகிய பாடல்களை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர். படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும், ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடி வருகிறது. இப்படம்ம இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுவாரசியத் தகவல்: கில்லி திரைப்படம் வசூலில் சொல்லி அடித்து வரும் நிலையில், கில்லி திரைப்படம் குறித்த சுவாரசியமானத் தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரம் இல்லையாம். விஜய்க்காக கதையை தயாரிப்பாளர் மாற்றினாராம். அதாவது, தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் தமிழ் ரிமேக் தான் கில்லி.தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ஒரு தம்பி தான் இருப்பாராம்.

கதையை மாற்றிய தயாரிப்பாளர்: அந்த தம்பி கதாபாத்திரத்திற்காக அழகி படத்தில் சிறிய வயது பார்த்திபனாக நடித்தா சதீஷ் ஸ்டீபனிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவர் நடிக்கவும் சம்மதம் தெரிவித்த நிலையில், அவரை வைத்து இயக்குனர் தரணி டெஸ்ட் ஷூட்டும் எடுத்தாராம். அந்த டெஸ்ட் ஷூட் எடுத்து முடித்த பிறகு தான் இயக்குனர் தரணி அந்த கதாபாத்திரத்தை தங்கையாக மாற்றி வைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்து மாற்றினாராம். இந்த தகவலை சதீஷ் ஸ்டீபன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X