Actor Sayaji shinde: பாரதி பட நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
சென்னை: நடிகர் சாயாஜி ஷிண்டே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் மராட்டி மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர். 65 வயதான சாயாஜி ஷிண்டே மாரடைப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு 99 சதவிகிதம் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்த சூழலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தற்போது சாயாஜி ஷிண்டே உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சாயாஜி ஷிண்டே. தன்னுடைய இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் தமிழில் அவரது முதல் படமே அதிரடியாக அமைந்தது. மகாகவி பாரதியின் கேரக்டரில் நடித்திருந்தார் சாயாஜி ஷிண்டே. தன்னுடைய உடல் மொழியால் ஏராளமான ரசிகர்களை இந்த முதல் படத்திலேயே கவர்ந்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள சாயாஜி ஷிண்டே/ மற்ற மொழிகளிலும் பெயர் சொல்லும் படியான பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சாயாஜி ஷிண்டே: தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மராட்டி மொழிகளில் பிரபல நடிகராக தொடர்ந்து நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே, தமிழில் இவர் நடிப்பில் வெளியான மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்று படத்தில் நிஜமான பாரதியாரை நம் கண்முன்னே கொண்டு வந்தவர் இவர். இந்நிலையில் அவர் அவருக்கு திடீரென ஏற்பட்டதாகவும் இதனால் மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி: தற்போது 65 வயதாகும் சாயாஜி ஷிண்டே, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த சூழலில் கடந்த சில தினங்களாக அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அப்போது அவரது இதயத்தின் வலது புறத்தில் 99 சதவிகித அடைப்பு இருப்பது கண்டறியப்பட்ட சூழலில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடனடியாக அவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை நடத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை: தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பாரதியார் படத்தின் மூலம் அறிமுகமான சாயாஜி சிண்டே, முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து விஷாலுடன் வெடி, தனுஷுடன் படிக்காதவன், அனுஷ்காவின் அருந்ததி, விஜய்யின் வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் தமிழில் நடித்துள்ளார். வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் பல கேரக்டர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்னுடைய இயல்பான நடிப்பால் கவர்ந்துள்ளார் சாயாஜி சிண்டே.
நாடக நடிகர் + பசுமை ஆர்வலர்: சமீபத்தில் நெட்பிளிக்சில் வெளியான கில்லர் சூப் வெப் தொடரிலும் இவர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்த சாயாஜி சிண்டே நாடக நடிகராக தன்னுடைய கேரியரை துவங்கி தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு பெற்றவர். நடிப்பு மட்டும் இல்லாமல் பசுமை ஆர்வலராகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.


Click it and Unblock the Notifications











