twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிரைவர் மகனாக பிறந்து.. பால்காரராக வாழ்கையை தொடங்கி.. ஜேம்ஸ் பாண்ட் சரித்திரம் படைத்த சீன் கானரி!

    |

    மும்பை: பிரபல ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை சீன் கானரின் மறைவு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஸ்காட்லாந்தின் ஃபவுண்டைன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள எடின்பர்க் பகுதியில் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தார்.

    அவரது தந்தை ஜோசப் கானரி ஒரு ஃபேக்டரி தொழிலாளி மற்றுமம் லாரி டிரைவர் ஆவார். இவரது அம்மா யூபிமியா மெக்லின் ஒரு தூய்மைப் பணியாளர் ஆவார்.

    பள்ளிப் படிப்பை கூட முடிக்கவில்லை

    பள்ளிப் படிப்பை கூட முடிக்கவில்லை

    எடின்பர்க் ஸ்லம் ஏரியாவில் பிறந்த கானரி தனது பள்ளிப் படிப்பை கூட முடிக்காமல் தொழிலாளியாகி விட்டார். தனது 17 வயதில் ராயல் கடற்படையில் பணியில் சேர்ந்த அவர், மருத்துவ காரணத்தால் சில ஆண்டுகளில் வெளியேற்றப்பட்டார்.

    மிஸ்டர் யுனிவர்ஸ்

    மிஸ்டர் யுனிவர்ஸ்

    கிடைத்த வேலைகளை எல்லாம் செய்துவந்த சீன் கானரி, 1950 ஆம் ஆண்டின் மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்றார், இதில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஒரு மாடலாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, கானரியின் முதல் நடிப்பு அறிமுகம் பிபிசி தயாரிப்பான Requiem for a Heavyweight ஆகும்.

    திக்குவாய் கேங்ஸ்டர்

    திக்குவாய் கேங்ஸ்டர்

    அவர் தனது முதல் படமான நோ ரோட் பேக்கில் ஒரு திக்குவாய் கேங்க்ஸ்டராக நடித்தார். தொடர்ச்சியான மறக்கமுடியாத பாத்திரங்களுக்குப் பிறகு, இது மற்றொரு பிபிசி தயாரிப்பான அன்னா கரேனினா, இது ஜேம்ஸ் பாண்ட் தயாரிப்பாளர்களான ஆல்பர்ட் ப்ரோக்கோலி மற்றும் ஹாரி சால்ட்ஸ்மேன் ஆகியோரின் கவனத்திற்கு சென்றது.

    கானரி பக்கம் திரும்பினர்

    கானரி பக்கம் திரும்பினர்

    டாக்டர். நோ படத்திற்கு அவர்களின் முதல் தேர்வாக சீன் கானரி இல்லை. தயாரிப்பாளர்கள் நடிகர் கேரி கிராண்ட்டைப் எதிர்பார்த்தார்கள். ஆனால் அன்னா கரேனினாவுக்குப் பிறகு தயாரிப்பாளர்கள் சீன் கானரி பக்கம் திரும்பினர்.

    பட வாய்ப்பு இல்லை

    பட வாய்ப்பு இல்லை

    தனது டீனேஜில் பால் விற்பவராகவும் இருந்தார் சீன் கானரி. 1954 ஆம் ஆண்டு Lilacs in the Spring - என்ற படத்தில் அன்கிரெடிட்டட் ரோலில் நடித்தார் சீன் கானரி. அதன்பிறகு 3 ஆண்டுகள் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார் சீன் கானரி.

    அடுத்தடுத்து 4 படங்கள்

    அடுத்தடுத்து 4 படங்கள்

    ஆனால் 1957ஆம் ஆண்டு நோ ரோடு பேக், ஹெல் டிரைவர்ஸ், ஆக்ஷன் ஆஃப்தி டைகர், டைம் லாக் என ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 4 படங்களில் நடித்தார். மளமளவென ஏறியது அவரது கிராஃப்.

    7 படங்கள்

    7 படங்கள்

    தொடர்ந்து பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக ஜெழலித்தார் சீன் கானரி. ஏராளமான பாடங்களில் நடித்துள்ள சீன் கானரி ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் டாக்டர் நோ, ஃபிரம் ரஷ்யன் வித் லவ், கோல்டு ஃபிங்கர், தண்டர் பால். யூ ஒன்லி லிவ் டுவைஸ், டைமண்ட்ஸ் ஆர் ஃபார எவர், நெவர் சே நெவர் அகைன் ஆகிய 7 படங்களில் நடித்துள்ளார்.

    ரசிகர்களின் ஃபேவரைட்

    ரசிகர்களின் ஃபேவரைட்

    1962ஆம் ஆண்டு வெளியான டாக்டர் நோ படத்தில் இருந்து 1983ஆம் ஆண்டு வெளியான நெவர் சே நெவர் அகைன் படம் வரை ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஜேம்ஸ் பாண்டாக வலம் வந்துள்ளார் சீன் கானரி. ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்த அவர், நீண்ட காலமாக 007 ல் நடித்த சிறந்த நடிகராக கருதப்பட்டார்.

    ஆஸ்கர் நாயகன்

    ஆஸ்கர் நாயகன்

    திரைத்துறைக்கு வழங்கப்படும் பல முக்கிய விருதுகளையும் குவித்துள்ளார் ஜேம்ஸ் பாண்ட். 1988ஆம் ஆண்டு வெளியான தி அன்டச்சப்ள்ஸ் படத்தில் ஐரிஷ் போலீஸ் அதிகாரியாக நடித்ததற்காக ஆஸ்கர் விருதை வென்றார். அதோடு 3 கோடல்டன் குளோப் விருதுகள் மற்றும் பாஃப்தா விருதுகளையும் வென்றுள்ளார்.

    2வது திருமணம்

    2வது திருமணம்

    1962ஆம் ஆண்டு நடிகை டயானே கிளிண்டோவை காதலித்து திருமணம் செய்தார் சீன் கானரி. ஆனால் 1973 ஆம் ஆண்டே அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு 1975 ஆம் ஆண்டு மேக்லைன் என்பவரை திருமணம் செய்து இறுதி வரை அவருடன் வாழ்ந்து வந்தார்.

    இன்று காலமானார்

    இன்று காலமானார்

    மறைந்த சீன் கானரிக்கு ஜாசன் கானரி என்ற மகன் உள்ளார். மேலும் நெய்ல் கார்னரி என்ற இளைய சகோதரர் உள்ளார். அவரும் ஓய்வு பெற்ற ஸ்காட்டிஷ் நடிகர் ஆவார். கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடிய சீன் கானரி, இன்று காலமானார்.

    தூக்கத்தில் உயிர் பிரிந்தது

    தூக்கத்தில் உயிர் பிரிந்தது

    இதுதொடர்பாக அவரது மகன் விடுத்துள்ள அறிக்கையில், தனது தந்தையான சீன் கானரி, கடந்த சில நாட்களகாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் பஹாமஸில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக கூறியுள்ளார்.
    அவரை மறைவு ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களையும் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Actor Sean connery born in Edinburg. his performance as an Irish cop in Brian De Palma’s The Untouchables that brought him an Oscar. Actor Sean Connery has died at the age of 90. Connery was the first actor to portray James Bond in film in Sevan films
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X