கொரோனா மீது ஜம்முன்னு உட்கார்ந்திருக்கும் இந்த ஜோக்கர் யாரு தெரியுமா? எல். ராமசந்திரனின் செம க்ளிக்
சென்னை: பிளேபாய் உள்ளிட்ட பிரபல இதழ்களுக்கு புகைப்படக் கலைஞராக பணியாற்றிய எல். ராமசந்திரன் கொரோனா தீமை வைத்து எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கொரோனா பொம்மை மீது ஜோக்கர் வேடமிட்டு ஜம்முன்னு உட்கார்ந்திருப்பது வேறு யாரும் இல்லை நம்ம சென்ட்ராயன் தான்.
யாஷிகா ஆனந்த், ரம்யா பாண்டியன், விஜய்சேதுபதி என பிரபலங்களை வைத்து போட்டோஷூட் நடத்திய எல். ராமசந்திரம் தற்போது செண்ட்ராயனை வைத்து கொரோனா விழிப்புணர்வு போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

நிர்வாண புகைப்படங்கள்
பிளேபாய் உள்ளிட்ட உலகின் பிரபலமான மேகஸின்களில் போட்டோகிராஃபராக பணியாற்றியவர் எல். ராமசந்திரன். நியூட் ஆர்ட் என சொல்லப்படும் நிர்வாணக் கலை புகைப்படங்களை எடுப்பதில் இவர் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட ஏகப்பட்ட நிர்வாண போட்டோஷூட்களை நடத்தி வைரலாக்கினார்.

விஜய்சேதுபதியுடன் இணைந்து
எல். ராமசந்திரன் நடிகர் விஜய்சேதுபதி உடன் இணைந்து ஏகப்பட்ட தீம்களில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களும் இணையத்தில் டிரெண்டாகின. கடந்த ஆண்டு கொரோனாவால் மன அழுத்தத்திற்கு மனிதர்கள் ஆளாகும் தீமில் விஜய்சேதுபதியை வைத்து விதவிதமான போட்டோஷூட்களை எல். ராமசந்திரன் நடத்தினார்.

மேன் ஆஃப் ஃபியூஷன்
மேலும், சமீபத்தில் கூட, விஜய்சேதுபதியை வைத்து 80களில் வரும் ஹீரோவாக அவரை மாற்றி மேன் ஆஃப் ஃபியூஷன் எனும் டைட்டிலில் எல். ராமசந்திரன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வேற லெவலில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின. இந்நிலையில், விஜய்சேதுபதியை தொடர்ந்து நடிகர் சென்ட்ராயன் உடன் இணைந்து எல். ராமசந்திரன் பணியாற்றி உள்ளார்.

கொரோனா ஜோக்கர்
கொரோனாவுக்கு மேல் ஜோக்கராக நடிகர் சென்ட்ராயன் அமர்ந்திருக்கும் படியான கொரோனா விழிப்புணர்வு போட்டோஷூட்டை புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன் எடுத்துள்ளார். தற்போது அந்த போட்டோவை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிட்டு, இந்த ஜோக்கர் உங்களுக்காக ஒரு மெசேஜ் சொல்ல வருகிறார் என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

கோமாளி முகமூடியை அகற்றுங்கள்
உங்கள் கோமாளி முகமூடியை அகற்றுங்கள் என்கிற தலைப்பில் கொரோனா குறித்த ஏகப்பட்ட விழிப்புணர்வு பேனர்களுக்காக இந்த போட்டோஷூட்டை நடிகர் சென்ட்ராயன் புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன் உடன் இணைந்து உருவாக்கி உள்ளார். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் இந்த விழிப்புணர்வு பேனர்களில் இடம்பெற்றுள்ளன.

சுல்தானில் சென்ட்ராயன்
மூடர் கூடம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சென்ட்ராயன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளியான நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சென்ட்ராயன் நடித்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











