பச்ச கலர் பிளேசர் ..பட்டாபட்டி டவுசர்.. கலக்கும் சென்ராயனின் புது போட்டோ ஷூட் !
சென்னை : பிரபலமான காமெடி நடிகர் சென்ராயன் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் திரைத் துறையில் அறியப்பட்டார்.
என்னதான் நகைச்சுவை கதாபாத்திரங்களில் சென்ராயன் பிரபலமடைந்து இருந்தாலும், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிக்கும் திறமையானவர்.
வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களில் தவறாது ஏதாவது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சென்ராயன் இப்பொழுது கண்கள் கூசும் வகையில் பச்சை கலர் பிளேசரில் பட்டாபட்டி பேண்டில் செம்ம கலர்ஃபுல்லாக போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

வில்லன் நடிகராகவும்
காமெடி நடிகராகவும், அதேசமயம் வில்லன் நடிகராகவும் தமிழ் ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து வரும் சென்ராயன் பொல்லாதவன், ஆடுகளம், மூடர்கூடம் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாக மக்களால் அறியப்பட்டார்.

மாறுபட்ட கதாபாத்திரங்களில்
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பொல்லாதவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட சென்ராயன், ரௌத்திரம் மூடர்கூடம் உள்ளிட்ட திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தூள் கிளப்பி இருப்பார்.

குணச்சித்திர கதாபாத்திரம்
பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சென்ராயன் அதேசமயம், வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக செய்து முடிக்கும் திறமையான நடிகர் ஆவார்.

அன்புக்கு சொந்தக்காரர்
2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட சென்ராயன் தனது கள்ளம் கபடம் இல்லாத விளையாட்டின் மூலம் தமிழ் மக்களின் அன்புக்கு சொந்தக்காரர் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முன்பு இருந்ததைவிடஅதிக அளவு மக்களுக்கு பரிச்சயமான சென்ராயன் இப்பொழுது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என வேற்று மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில்
வெற்றிமாறன் இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது தலையைக் காட்டிவிட்டு செல்லும் சென்ராயன் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்களிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மெயின் வில்லனாக
பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து காமெடி நடிகராக பிரபலமாகி இருந்த சென்ராயன் ஜீவா ஆக்சனில் பட்டையைக் கிளப்பி இருந்த ரௌத்திரம் திரைப்படத்தில் திரையுலகமே அசந்து போகும் வகையில் மெயின் வில்லனாக நடித்து அசால்ட் பண்ணியிருப்பார்.

மீண்டும் ஒரு போட்டோ ஷூட்
இவ்வாறு திரைப்படங்களின் வாயிலாக ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து கொண்டே இருக்கும் நடிகர் சென்ராயன், சமீபத்தில் பலரும் அசந்து போகும் வகையில் போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு போட்டோஷூட் நடத்தி வேற லெவல் டிரெண்ட்டாகி வருகிறார்.

சிட்டி பாதி கிராமம் பாதி
சுருட்டை முடியை தனது ஆஸ்தான அடையாளமாக கொண்டுள்ள சென்ராயன், கண்கள் கூசும் பச்சை கலர் பிளேசரில் பட்டாபட்டி பேண்ட் அணிந்து கொண்டு, கையில் மஞ்சப்பை வாயில் துண்டு பீடி என சிட்டி பாதி கிராமம் பாதி என அட்டகாசம் செய்திருக்கும் இந்த கண்கவர் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வேற லெவலில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











