கோட் சூட்டில் டிப் டாப்பாக வலம் வரும் சென்றாயன்.. ப்ப்ப்பா ஆளே மாறிட்டாரே !
சென்னை : வித்தியாசமான ஹேர் ஸ்டைல் சிம்பிளான டிரஸ் என எப்பொழுதும் சாதாரண உடையிலேயே தோன்றிய சென்றாயன் தற்பொழுது கோட் சூட்டுடன் டிப் டாப்பாக வலம் வருகிறார். இதுவரை யாரும் பார்த்திராத இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.
மெல்லிய உடல் பரட்டை தலை என தன்னுடைய தன்னிச்சையான தோற்றத்தால் நம் அனைவரையும் நடிப்பின் மூலம் மிரட்டி வந்தவர் நடிகர் சென்ராயன்.
இவர் காமெடி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நம் அனைவரையும் இன்று வரை கவர்ந்து வருகிறார்.

கவனத்தை ஈர்த்தார்
மூடர்கூடம், சிலம்பாட்டம், பொல்லாதவன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் சென்ராயன். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் மகளிர் மட்டும், அச்சச்சோ போன்ற படங்களில் தோன்றிய இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

காமெடியும் வரும்
இந்நிலையில் ஆடுகளம், சிலம்பாட்டம் என தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திரம் போன்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த இவர் மூடர் கூடம் என்ற படத்தின் மூலம் தன்னால் காமெடியிலும் கலக்க முடியும் என நிரூபித்தார். காமெடியில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர், மலையாளம் தெலுங்கு என அங்கேயும் கலக்கி வருகிறார்

அட்டகாசமான நடிப்பு
நான்கு முட்டாள் இளைஞர்களின் கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. மேலும் அனைவரும் இவரை வில்லன் நடிகராக மட்டும் பார்த்து வந்த நிலையில் மூடர் கூடம் படத்தில் இவர் காமெடியில் பல அட்டகாசங்களை செய்து அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார்.

மிரட்டும் வில்லன்
இவ்வாறு மூடர் கூடம் படத்தின் மூலம் தன்னால் அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என நிரூபித்த சென்ராயன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஜீவா உடன் இணைந்து ரௌத்திரம் என்ற படத்தில் மெயின் வில்லனாக வந்து அனைவரையும் மிரட்டி எடுத்திருப்பார்.

பலர் ஆதரவு
படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்துகொண்டு அனைவரையும் ரசிக்க வைத்தார். இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு அப்பாவித்தனமாக, எளிமையாக மிகவும் இயல்பாக இருந்த இவருக்கு பலரின் ஆதரவும் கிடைத்தது.

கோட் சூட்டுடன்
எப்போதும் சிம்பிளான உடையில் வலம் வந்த சென்ராயன் தற்பொழுது கோட் சூட்டுடன் டிப் டாப்பாக வேற லெவலில் ஒரு போட்டோ ஷூட் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். முதல்முறையாக கோட்டு சூட்டுடன் கிளாஸியாகத் தோன்றும் இவரது படங்கள் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது. மேலும் இந்த புகைபடத்தை பார்த்த பலரும் நம்ம மூடர் கூடம் சென்ராயனா இது என மூக்கின் மேல் விரல் வைத்தபடி ஆச்சரியத்தில் ஆழ்ந்தவாறு அந்த கிளாசியான போட்டோக்களை பார்த்தும் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











