பள்ளத்தை நோக்கி உருண்டோடிய நடிகர் செந்திலின் கார்.. பழைய ஜோக் தங்கதுரை மீட்டாரா.. என்ன மேட்டரு?
சென்னை: காமெடி நடிகர் செந்தில் மற்றும் பாபி சிம்ஹா சென்ற கார் திடீரென பள்ளத்தை நோக்கி உருண்டோட, அதை பார்த்து பதறிப்போன பழைய ஜோக் தங்கதுரை காரின் முன் பாய்ந்து அதனை தடுத்துள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் இணைந்து ஏகப்பட்ட காமெடி காட்சிகளில் கலக்கியவர் நடிகர் செந்தில்.
சினிமாவுக்கு பெரிய பிரேக் விட்டிருந்த அவர் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் தடை அதை உடை படத்தில் செந்தில் நடித்து வரும் நிலையில், தான் இப்படியொரு சம்பவம் நடைபெற்றது.

உருண்டோடிய செந்தில் கார்
நடிகர் பாபி சிம்ஹா மற்றும் காமெடி நடிகர் செந்தில் வந்த கார் ஒரு மலைப் பகுதியில் உருண்டோடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. பாபி சிம்ஹா மற்றும் செந்தில் உடன் மேலும், சில நடிகர்களும் அந்த காருக்குள் இருந்தனர். அதை பார்த்த காமெடி நடிகர் பழைய ஜோக் தங்கதுரை செய்த செயல் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தாங்கிப் பிடித்த தங்கதுரை
உருண்டோடி வரும் காரில் இருப்பவர்களை காப்பாற்றுவது போல உடனடியாக ஓடிப் போய் பழைய ஜோக் தங்கதுரை பண்ணும் பழைய காமெடி வீடியோ ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. உண்மையில், அது ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சி என்பதை அறிந்து கொள்ளும் ரசிகர்கள் படக்குழு செட்டப் செய்த காட்சியை பார்த்து சிரித்து ஷேர் செய்து வருகின்றனர்.

தடை அதை உடை
இயக்குநர் ராகேஷ் என்.எஸ். இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் தடை அதை உடை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாபி சிம்ஹா நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே டிராப் ஆன நிலையில், இந்த படம் நிச்சயம் தியேட்டருக்கு வந்தே தீரும் என்கிற முயற்சியில் படக்குழு தீவிரமாக பணியாற்றுவது மட்டுமின்றி படத்தை பற்றி மக்கள் மத்தியில் பேச வைக்க இதுபோன்ற டிரெண்டிங்கான விஷயத்தையும் செய்து வருகின்றனர்.

மகனுடன் செந்தில்
இந்த படத்தில் செந்தில் மட்டுமின்றி அவரது மகன் மணிகண்டன் பிரபுவும் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்கிற அப்டேட்டும் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய திரையில் நடிகர் செந்தில் மற்றும் முதன்முறையாக அவரது மகனின் நடிப்பையும் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











