twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் நிம்மதியே போச்சு.. நகைச்சுவை நடிகர் செந்தில் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!

    |

    சென்னை: நடிகர் செந்தில் தனது நிம்மதியே போய்விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் செந்தில். நடிகர் செந்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

    8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்! 8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்!

    செந்தில் - கவுண்டமணி காம்போவில் உருவான காமெடிகளுக்கு இணை எதுவுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து போயுள்ளது அவர்களின் நகைச்சுவை.

    பாஜகவில் இணைந்தார்

    பாஜகவில் இணைந்தார்

    தொடர்ந்து படங்களில் நடித்து வரும் செந்தில் அரசியலிலும் தீவிரமாக உள்ளார். அதிமுகவில் இருந்த நடிகர் செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். பாஜகவுக்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் செந்தில்.

    தடுப்பூசி விழிப்புணர்வு

    தடுப்பூசி விழிப்புணர்வு

    இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் சில நாட்களிலேயே குணமாகி வீடு திரும்பினார். தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நிம்மதியே போச்சு

    நிம்மதியே போச்சு


    இந்நிலையில் நடிகர் செந்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய நிம்மதியே போய்விட்டதாக புகார் அளித்துள்ளார். தனது பெயரில் டிவிட்டரில் உலா வரும் போலி கணக்கு குறித்து கமிஷனர் அலுவலகத்தில் வக்கீலுடன் வந்து புகார் அளித்துள்ளார் செந்தில்.

    முதல்வரைப் பற்றி மோசமாக

    முதல்வரைப் பற்றி மோசமாக

    தனது புகாரில், செந்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தான் சினிமாவில் இருப்பதாக கூறியுள்ளார். சிலர் தனது பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கை உருவாக்கியுள்ளனர், இது தமிழக அரசு மற்றும் அதன் முதல்வரைப் பற்றி மோசமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

    கணக்கை முடக்க வேண்டும்

    கணக்கை முடக்க வேண்டும்

    இதனால் தனது நிம்மதியே போய்விட்டதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது பெயரில் உள்ள போலி டிவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும் செந்தில் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    சார்லி புகார்

    சார்லி புகார்

    கடந்த சனிக்கிழமைதான் நடிகர் சார்லி தனது பெயரில் போலி டிவிட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தார். அதனை தொடர்ந்து அவர் புகார் அளித்த அரை மணி நேரத்திலேயே அவரது பெயரில் இருந்த போலி டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Senthil complaints against fake twitter account in his name. He urges to ban the fake account immediately.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X