போன் வந்தா எடுத்து பேசுவேன்.. நமக்கு இந்த டிவிட்டர் கிட்டர்லாம் தெரியாது.. நடிகர் செந்தில் அதிரடி!

சென்னை: டிவிட்டரில் இணைந்ததாக வெளியான தகவலுக்கு நடிகர் செந்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

எனக்கு எதுவும் தெரியாது? Actor Senthil on Twitter? | Govindamani Senthil

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் செந்தில். அவர் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்திருக்கும் காமெடி காட்சிகள் காலங்கள் கடந்தும் பேசும்.

1979 முதல் தனது அப்பாவித்தனமான நகைச்சுவையால் அசத்தி வந்த செந்தில் கடந்த சில ஆண்டுகளாக சொற்ப படங்களிலேயே நடித்து வருகிறார். கடைசியாக நடிகர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார் செந்தில்.

பரவிய தகவல்

பரவிய தகவல்

இந்நிலையில் நடிகர் செந்தில் டிவிட்டரில் இணைந்து விட்டதாக நேற்று ஒரு தகவல் றெக்கை கட்டி பறந்தது. கொரோனா காரணமாக மக்களுடன் தொடர்பில் இருக்கும் டிவிட்டர் தளத்தில் இணைந்திருப்பதாக அவரது பெயரில் சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்றும் வைரலானது.

வெளியான அறிக்கை

வெளியான அறிக்கை

அதில் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு என SenthilOffl என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. டிவிட்டரில் இருந்த அந்தக் கணக்கில் இருந்துதான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

டிவிட்டர் கிட்டர்லாம்

டிவிட்டர் கிட்டர்லாம்

இதனை அறிந்த ரசிகர்கள் அவரை உடனடியாக பின்தொடர ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் செந்திலிடம் சிலர் கேட்டபோது, போன் வந்தா எடுத்து பேசுவேன்.. நமக்கு டிவிட்டர் கிட்டர்லாம் தெரியாது.

போலியானது

போலியானது

டிவிட்டர்ன்னா என்னன்னு கூட எனக்கு தெரியாது. டிவிட்டரில் நான் இல்லை. அது போலியானது என கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு டிவிட்டரில் இணைந்தார் என்றும் பின்னர் அது அவருடைய கணக்கு இல்லை போலியானது என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X