டிவிட்டரில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில்.. தீயாய் பரவிய அறிக்கை.. ஆனா புஸ்ஸாகிப் போச்சே!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் டிவிட்டரில் இணைந்ததாக கூறி அறிக்கை சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணி. இவர்களின் காம்போவில் வெளியான காமெடிகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

அந்தளவுக்கு தங்களின் நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தனர். அவர்கள் இருவரும் நடிக்கும் படங்கள் நிச்சயம் அவ்ரேஜ் வெற்றி பெறும் என கேரண்டியாக சொல்லலாம்.

முக பாவனைகள்

முக பாவனைகள்

அதிலும் குறிப்பாக நடிகர் செந்திலின் அப்பாவித்தனமான நடிப்புக்கும் முக பாவனைகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் அண்ணன் அண்ணன் என்று அழைத்து நடிகர் கவுண்டமணியிடம் அடி வாங்குவது கூட ரசிக்கும் வகையிலேயே இருக்கும்.

டிவிட்டரில் அறிக்கை

டிவிட்டரில் அறிக்கை

புது புது நகைச்சுவை நடிகர்களின் அறிமுகமாவதோலோ என்னவோ.. அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைக்காட்டி வருகிறார் நடிகர் செந்தில். கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் செந்தில் டிவிட்டர் வலைதளத்தில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் ஒரு அறிக்கை தீயாய் பரவியது.

வீட்டிலேயே இருங்கள்

வீட்டிலேயே இருங்கள்

அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியான அந்த அறிக்கையில், அனைவருக்கும் வணக்கம், நான் உங்கள் நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பியுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன்.

டிவிட்டரில் அக்கவுண்ட்

டிவிட்டரில் அக்கவுண்ட்

கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோஷம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசைப்பட்டேன்! எனவே நான் தற்போது டிவிட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன் SenthilOff. அனைவரின் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! என குறிப்பிடப்பட்டுள்ளது.

போலியானது?

போலியானது?

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை உடனடியாக பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள். கணக்கு தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்துள்ளனர். ஆனால், அவரது பெயரில் உலா வரும் இந்த அறிக்கையும் அவரது டிவிட்டர் கணக்கும் போலியானது என்றும் தகவல் பரவி வருகிறது.

புஸ்ஸாகிப் போச்சே

புஸ்ஸாகிப் போச்சே

ஆனால் உண்மையானதா அல்லது போலியானதா என்பது குறித்து நடிகர் செந்தில் தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதனைக் கேட்ட ரசிகர்கள், இது எப்டி அண்ணே எரியும் என செந்தில் மேன்டிலை உடைத்த கதையாகிவிட்டதே என அவரது காமெடியை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X