அதாண்ணே இது.. பட்டுன்னு முடிஞ்ச படப்பிடிப்பு.. செம ஹேப்பியில் செந்தில்!
சென்னை : செந்தில் என்றதும் நினைவுக்கு வருவது கவுண்டமணியும் அவரது வாழைப்பழ காமெடியும் தான். ஒரு திரைப்படம் வெற்றி பெற முக்கிய காரணம், கதை என்றால், அதைவிட முக்கியமானது காமெடி.
80 மற்றும் 90களில் இவர்கள் இருவரின் நகைச்சுவைக்காகவே பல படங்கள் வெற்றி கண்டன என்றால் அது மிகையாகாது.
பல தயாரிப்பாளர்கள் இவர்களை போட்டிபோட்டிக்கொண்டு புக் செய்தனர், அந்த சமயத்தில் கலக்கல் காமெடியன்ஸ் என்று கூறும் அளவுக்கு இருவரும் இணை பிரியாது இருந்தார்கள்.

ஹீரோவாக
ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா நடிகர் பிரேம்ஜியை வைத்து சத்திய சோதனை என்ற படத்தினை இயக்கி வந்தார். இதையடுத்து நடிகர் செந்திலை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். சத்திய சோதனை படத்தின் தயாரிப்பாளரே இந்த படத்தினையும் தயாரித்திருக்கிறார்.

முதன்முறையாக
சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள செந்தில், நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், தற்போதுதான் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ளார்.

நட்சத்திர பேச்சாளர்
நடிப்பு மட்டுமல்லாது அரசியலில் தன்னை இணைத்துக் கொண்ட செந்தில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக இருந்த செந்தில், தற்போது அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் இணைந்துவிட்டார்.

படப்பிடிப்பு நிறைவு
இந்நிலையல் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1ந் தேதி தொடங்கியது. இதையடுத்து நேற்று அதன் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. வேறும் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிந்துள்ளார் இயக்குனர்.


Click it and Unblock the Notifications











