அட.. நடிகர் செந்தில் மகனா இவர்.. அம்சமா இருக்காரே.. பாபி சிம்ஹா படத்தில் அறிமுகம்!

சென்னை : நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன் பாபி சிம்ஹா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் பட்டியலில் தனித்த இடத்தைப் பிடித்தவர் செந்தில்.

செந்திலுக்கு உயிர் கொடுத்தது கவுண்டமணி எனலா, இவங்க இரண்டு பேரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள் தான். இதனால், 80 களிலும் 90 களிலும் பெரும்பாலான படங்களில் இவர்கள் இணைந்தே நடித்திருந்தனர்.

கரகாட்டக்காரனை மறக்க முடியுமா?

கரகாட்டக்காரனை மறக்க முடியுமா?

நகைச்சுவை நடிகர் செந்தில் என்றதும் நம் அனைவருக்கும் நினைக்கு வருவது கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழ காமெடி தான். இந்த காமெடி காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிப்பை அடக்கவே முடியாது. அந்த அளவுக்கு உடல் மொழியிலும், பேஸ் ரியாக்ஷனிலும் புகுந்து விளையாடி இருப்பார் செந்தில். அந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வெச்சி இருக்காணு இவர் கேட்ட அந்த வசனத்தை இப்போதைய 2கே கிட்டுகளும் கொண்டாடி வருகின்றனர்.

1300க்கும் மேற்பட்ட படங்களில்

1300க்கும் மேற்பட்ட படங்களில்

தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி என 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த செந்திலுக்கு 95க்கு பிறகு படவாய்ப்புகள் குறைந்து விட்டன. இதையடுத்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் உருவான தானா சேந்த கூட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த பிறகு மீண்டும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகின்றார்.

ஆயுள் தண்டனை கைதியாக

ஆயுள் தண்டனை கைதியாக

நகைச்சுவை,குணசித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் புகுந்து விளையாடும் செந்தில், கிடாயின் கருணை மனு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் சங்கையா இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் ஆயுள் தண்டனை கைதியாக மிகவும் மென்மையான கதாபாத்திரத்தில் செந்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது டப்பிங் பணி நடைபெற்று வருகிறது.

செந்தில் மகன் அறிமுகம்

செந்தில் மகன் அறிமுகம்

இந்நிலையில் நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு, பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் தடை உடை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நடிகர் செந்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதில், செந்திலின் மகன் வேடத்தில் அவரின் மகன் மணிகண்ட பிரபுவே நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல் மருத்துவர்

பல் மருத்துவர்

நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தவரான மணிகண்டபிரபு ஒரு பல் மருத்துவர் ஆவார். இதுவரையில் சினிமாவில் நுழைய மணிகண்ட தற்போது தன் தந்தை நடிக்கும் படத்திலேயே அவர் அறிமுகமாக உள்ளர்.மேலும் இரண்டாவது மகன் ஹேமசந்திர பாபு திரைப்பட இயக்குநராக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X