மார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் காமெடி நடிகர்.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை : தமிழ் சினிமாவில் தலை சிறந்த காமெடி ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் நடிகர் செந்தில்.

எக்கச்சக்கமான திரைப்படங்களில் தனது வெள்ளந்தியான காமெடியின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த இவர் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படங்களுக்காகவே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.

இந்நிலையில் நடிகர் செந்திலை இதுவரை பலரும் கண்டிராத வித்தியாசமான மார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஆளே டோட்டலாக மாறிப்போன புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடிக்கும் லூட்டியை

அடிக்கும் லூட்டியை

90களில் கிட்டத்தட்ட பெரும்பான்மையான திரைப்படங்களில் செந்தில் கவுண்டமணி கூட்டணியில் இல்லாத காமெடி காட்சிகளே இருக்க முடியாது அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் இணைந்து அடிக்கும் லூட்டியை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

ஒன்றாகதான் நடிப்பார்கள்

ஒன்றாகதான் நடிப்பார்கள்

செந்தில் கவுண்டமணி இன்று வரை எக்கச்சக்கமான திரைப்படங்களில் இணைந்து நடித்து இருந்த நிலையில், இவர்கள் இருவரும் நடித்தால் ஒன்றாகதான் நடிப்பார்கள் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாக பேசப்பட்டன.

இருவரும் தனித்தனியாக

இருவரும் தனித்தனியாக

மேலும் இவர்களது காமெடி இன்று வரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கின்ற நிலையில் சமீப காலமாக செந்தில் மற்றும் கவுண்டமணி என இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

வெப் சீரிஸ்களிலும்

வெப் சீரிஸ்களிலும்

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருக்கும் நடிகர் செந்தில் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் அதேசமயம் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

ஆயிரம் ஜன்னல் வீடு

ஆயிரம் ஜன்னல் வீடு

சமீபத்தில் எடுக்கப்பட்ட விளம்பரப்படம் ஒன்றிற்கு செம ஸ்டைலிஷாக மார்டன் உடையணிந்து கொண்டு இதுவரை யாரும் கண்டிராத வகையில் பேஸ் பேஸ் என சொல்லும் அளவிற்கு செம ஸ்டைலிஷாக இருக்கும் நடிகர் செந்திலின் இந்த அசர வைக்கும் புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகின்றன. மேலும் இவர் பிரபல யூடியூப் சேனலானா பிளாக் ஷீப் உடன் இணைந்து "ஆயிரம் ஜன்னல் வீடு" என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X