நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா.. குடும்பத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

நடிகர் செந்தில் தனியார் மருத்துமனையில் அனுமதி

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இன்று வரை செந்தில் - கவுண்டமணி காம்போவுக்கு இணை யாருமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் இருவரும்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் செந்தில் அரசியலிலும் தீவிரமாக உள்ளார். அதிமுகவில் இருந்த நடிகர் செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக நடிகர் செந்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

குடும்பத்துடன் சிகிச்சை

குடும்பத்துடன் சிகிச்சை

நடிகர் செந்தில், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் செந்தில் தனது குடும்பத்தினருடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் நிலையில் முன்னேற்றம்

உடல் நிலையில் முன்னேற்றம்

இந்நிலையில், அவரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்து மூன்று நாட்களில் நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள்

பல்வேறு கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரைத்துறை நட்சத்திரங்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X