காதல் தின சிறப்பு போஸ்டர்... கவனத்தை ஈர்த்த சேத்தன் சீனு புகைப்படங்கள்
சென்னை : நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில் சேத்தன் சீனு நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
கே2கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படத்தின் ப்ரீ லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

நடிகர் சேத்தன் சீனு
நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில் கே2கே புரொடக்ஷன்ஸ தயாரித்துவரும் புதிய படத்தில் சேத்தன் சீனு நடித்து வருகிறார். இந்தப் படம் காதலை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ப்ரீ லுக் போஸ்டர்கள்
காதலர் தினத்தையொட்டி படத்தின் ப்ரீ லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்களில் சேத்தன் சீனு கையில் ரோஜாவுடன் மரத்தின் பின்னால் மறைந்தபடி யாருக்காகவே காத்திருப்பது போல அமைந்துள்ளது.

புதிய போஸ்டர்கள்
மற்றொரு புகைப்படத்தில் சேத்தன் சீனு குளியலறையில் நிர்வாணமாக சோகமாக அமர்ந்திருப்பது போல காணப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்கள் இரண்டுமே காதல் காத்திருப்பு மற்றும் காதல் சோகத்தை வெளியிப்படுத்தியுள்ள நிலையில், காதலர் தினத்தையொட்டி வெளியாகியுள்ளது.

காவேரி கல்யாணி இயக்கம்
காசி, சமுத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ள காவேரி கல்யாணி இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கே2கே புரொடக்ஷன்ஸ் மூலம் இந்தப் படத்தை தயாரித்தும் வருகிறார். சஸ்பென்ஸ் மற்றும் காதலை மையமாக கொண்டு த்ரில்லர் படமாக இந்தப் படம் வெளியாகவுள்ளது.

விரைவில் ரிலீஸ்
படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சேத்தன் சீனுவுடன் சுகாஷினி மணிரத்னம், சித்தி இட்னானி, ஸ்வேதா, ரோஹித் முரளி, விடிவி கணேஷ், புகழ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அச்சு ராஜாமணி இசை
படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். சமீபத்தில் குடியரசு தினத்தையொட்டி வெளியான இந்தப் படத்தின் போஸ்டர்கள் வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது காதலர் தினத்தையொட்டி புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











