இதுல கொண்டு போறீங்களே.. கடைசியாக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட சேதுவின் உடல்.. கதறிய உறவினர்!

சென்னை: நடிகர் சேதுரமானின் உடல் இறுதியாக ஆம்புலன்ஸில் ஏற்றிச்செல்லப்பட்டதை பார்த்து அவரது உறவினர் கதறியது கலங்கச் செய்தது.

Recommended Video

Dr. Sethu எப்படி இறந்தாருனு கேக்காதீங்க | Dr. Ashwin Open Request

இளம் நடிகரான சேதுராமன் கடந்த 26ஆம் தேதி இரவு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு பெண் குழந்தை

ஒரு பெண் குழந்தை

தோல் சிகிச்சை நிபுணரான சேதுராமன் சென்னை அண்ணா நகரில் ஸ்கின் கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தார். சேதுராமன் 2016ஆம் ஆண்டு உமையாள் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

பலரும் வேதனை

பலரும் வேதனை

திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டு சேது அகால மரணமடைந்தது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவரது இறுதிச்சடங்கில் பலரும் பங்கேற்க முடியாமல் போனது.

ஆம்புலன்ஸில் ஏற்றியபோது

ஆம்புலன்ஸில் ஏற்றியபோது

இதனை தொடர்ந்து 27 ஆம் தேதி பகல் சேதுராமனின் வீட்டிலேயே அவருக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றியபோது அவரது மனைவியும் தயாராரும் கதறி அழுதனர்.

என்னடா இந்த வண்டில..

என்னடா இந்த வண்டில..

அவரது மனைவி சேதுவின் முகத்தை அணைத்து முத்தமிட்டார். அவரது தாயும் சேது சேது என கதறினார். அவரது உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டதை பார்த்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், என்னடா இந்த வண்டில கொண்டு போறீங்க.. அவனுக்கு பென்ஸ் காரும் ஆடி காரும் தானே பிடிக்கும் என்று கதறினார்.

கலங்க வைத்த கதறல்

கலங்க வைத்த கதறல்

சேதுராமனின் இறுதிச்சடங்கு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரது குடும்பத்தினரின் இந்த கதறல் கலங்கச் செய்துள்ளது. சேதுராமனின் உடலை அவரது நெருங்கிய நண்பரான சந்தானம் கண்ணீருடன் சுமந்து சென்றார். இதனை தொடர்ந்து நடிகர் சேதுராமனின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X