ஐ அம் சேஃப்.. ப்ளீஸ் பி சேஃப்.. எவ்வளவு பொறுப்பு.. அக்கறை.. கண்ணீரை வரவழைக்கும் சேதுவின் வீடியோ!

சென்னை: நான் சேஃப் நீங்களும் சேஃபா இருங்க என்று அத்தனை பொறுப்போடு நடிகர் சேது வெளியிட்டுள்ள வீடியோ கண்ணீரை வரவழைக்கிறது.

Recommended Video

Actor & Dr.Sethu Last awarness Video | Zi CLinic | Dermatologist

இளம் நடிகரும் மருத்துவருமான சேதுராமன் நேற்றிரவு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராக இருந்தாலும் திரைத்துறைய சேர்ந்த பலருடனும் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். தோல் மருத்துவ நிபுணரான நடிகர் சேது, சென்னை அண்ணாநகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.

பொதுவெளியில் எப்படி?

பொதுவெளியில் எப்படி?

மருத்துவரான சேது, தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்தும், கைகளை எப்படி கழுவ வேண்டும்? மருத்துவமனை போன்ற பொது இடங்களில் கைகளை நேரடியாக பயன்படுத்தாமல் எப்படி கதவுகளை திறக்க வேண்டும்? லிஃப்ட்டை எப்படி ஆப்ரேட் செய்ய வேண்டும் என்பது குறித்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

விழிப்புணர்வு வாசகங்கள்

விழிப்புணர்வு வாசகங்கள்

அதில் சானிடைஸ்ஸர் கொண்டு தனது கைகளை சுத்தம் செய்யும் சேது, டிஷ்யூ பேப்பர்களை கொண்டு கதவை திறக்கிறார். பின்னர் அந்த டிஷ்யூ பேப்பரைக் கொண்டு லிஃப்ட்டை ஆப்ரேட் செய்யும் சேது, லிஃப்ட்டுக்குள் இருக்கும் விழிப்புணர்வு வாசகங்களை படித்து காண்பிக்கிறார்.

ப்ளீஸ் பி சேஃப்

ப்ளீஸ் பி சேஃப்

அடிக்கடி கையை கழுவுங்கள், இருமும் போதும் தும்மும் போதும் டிஷ்யூ பேப்பரை பயன்படுத்துங்கள் என்று கூறி , பின்னர் டிஷ்யூ பேப்பரை அங்குள்ள குப்பைத்தொட்டியில் போடுகிறார். தொடர்ந்து பேசும் நடிகர் சேது, ஐ அம் சேஃப் ப்ளீஸ் பி சேஃப் என கூறி தனது வீடியோவை முடித்திருக்கிறார் சேது.

டெமோ வீடியோ

டெமோ வீடியோ

5 நாட்களுக்கு பிறகு நாம் இருக்க மாட்டோம் என்று தெரியாமல் அவர் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு இப்படி ஒரு டெமோ வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

ஏன் இப்படி?

இதனை பார்த்த பலரும் கண்ணீர் விட்டுள்ளனர். ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். வீடியோவை பார்த்த சில நெட்டிசன்கள், கடவுளே ஏன் இப்படி ஒரு நல்ல மனிதரை இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொண்டாய் என வேதனை பட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X