தாலியை அடமானம் வைத்து ஆபரேஷன்.. என் கணவர் செய்த காரியம்.. சேதுவின் மனைவி உருக்கம்

சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் சேதுராமன். சக்கை போடு ராஜா, வாலிபராஜா படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில், அவரது திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரு்த்துவரான இவர் இளம் வயதிலேயே மரணமடைந்தது பெரும் துயரம் தான். இவரை இழந்து வாடும் அவரது மனைவி உமா இரண்டு குழந்தைகளுடன் எப்படி குடும்பத்தை கவனித்து வருகிறார் என்பதையும் சேதுவை பற்றியும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சேது இறந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரது நினைவுகளோடு வாழ்ந்து வரும் சேதுவின் மனைவி உமா என்ன சொல்கிறார் தெரியுமா?. சேதுராமனை பற்றி அவரது மனைவி உமா பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்தால், அதில், எல்லோரும் அவர் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், என்னுடன் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறார். அவர் ஆரம்பித்து வைத்த கிளினிக், நாங்கள் வாழும் வீடு என அனைத்திலும் அவர் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். சேதுவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.,கடந்து போகக்கூடிய வாழ்க்கையும் நாங்கள் இருவரும் வாழவில்லை என மனதில் சோகம் இருந்தாலும் சிரித்த முகத்துடன் சேதுவுடன் இருக்கும் காதலோடு தெரிவித்தார் உமா.

actor-sethu-wife-shared-to-her-life

குழந்தைகள் எதிர்காலம்: மகன் வேதாந்த், மகள் சஹானா ஆகிய இருவரின் எதிர்காலமும் என் கையில் இருக்கிறது. அவர்கள் முன்னாடி நான் சோகமாக இருப்பது நடித்தாலும் தெரிந்து விடும். குழந்தைங்க முன்னாடி அப்படி நடித்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பொய்யான வாழ்க்கையை கொடுத்துட்டோம் என்கிற எண்ணம் வந்துவிடும். அவங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதுதான் என் கடமை இருக்கிறது. என் குழந்தைங்க தான் என் நம்பிக்கை என உமா தெரிவித்துள்ளார்.

எங்களது திருமணம் அரேஞ்ச் மேரேஜ் தான். எங்களுக்கு முதல் குழந்தை மகள் பிறந்தபோது எனக்கு பிடித்த கணவராகவும், என் குழந்தைக்க நல்ல தகப்பனாக சேது இருந்தார். என் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தார். அவர் மாதிரியெல்லாம் யாரையும் பார்க்க முடியாது. அவரோட கனவு கிளினிக்கை தொடங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். இப்போ அவர் இல்லாவிட்டாலும் அதை நான் செய்துகொண்டிருக்கிறேன் என உமா தெரிவித்துள்ளார். என் கணவருக்கு லவ் ப்ரோபோஸ், கிஃ்ப்ட் கொடுக்க தெரியாது. நான்தான் அவரை சர்ப்ரைஸ் பண்ண கிஃப்ட் கொடுப்பேன்.

actor-sethu-wife-shared-to-her-life

தாலி அடமானம்: கிளினிக் போகும் போது சேது என்னையும் கூட்டி செல்வார். அப்படி ஒருநாள் நடந்த நிகழ்வை என் வாழ்வில் மறக்க முடியாது. ஒரு பேஷண்ட்டுக்கு ஆபரேஷன் பண்ணும்போது தாலியை அடமானம் வைத்து ஃபீஸ் கட்டியதை தெரிந்துகொண்ட சேது உடனே அவங்க கொடுத்த காசு வேண்டாம் என சொல்லிட்டாரு. அந்த தாலியை மீட்டு கழுத்துல போட்டுக்கங்க என்றூ கூறி அவங்களுக்கு உதவியா ரூ.5,000 பணம் கொடுத்து அனுப்பினாரு. சேதுவை பார்த்து பல இடங்களில் பிரமித்து போனேன். மருத்துவராக மட்டும் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு இருப்பது வியக்க வைத்தது என உமா தெரிவித்திருக்கிறார்.

எதிர்பாராத மரணம்: சேதுவின் மரணம் குறித்து பேசியபோது மனமுடைந்த உமா, என் கணவர் ரொம்ப ஃபிட் இருப்பாரு. உடற்பயிற்சி எல்லாம் செய்வாரு ஆனால் அவரது மரணம் எதிர்பார்க்க முடியாத இழப்பு. அந்த நேரத்தில் நான் கர்ப்பமாக இருந்தேன். என் மகன் இந்த உலகை பார்ப்பதற்கு முன்பே சேதுவின் மரணம் கொடுமையானது. இப்போ என்னை அவங்க அப்பா, அம்மா தான் சொந்த மகள் போல் பார்த்துக்கொள்வதாக சேதுவின் மனைவி உமா தெரிவித்திருக்கிறார். மேலும் எனக்கு நிறைய கனவு என்பதே சேதுவின் ஆசையே நிறைவேற்றுவது தான் என தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X