நீங்க டாக்டரா இல்லாட்டியும் கூட ஒரு உயிர காப்பாத்தலாம்.. வைரலாகும் நடிகர் சேதுராமனின் கடைசி வீடியோ!

சென்னை: நடிகரும் மருத்துவருமான சேதுராமன் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து இறக்கும் முன்பு நேற்று வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Actor & Dr.Sethu Last awarness Video | Zi CLinic | Dermatologist

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மருத்துவர் சேதுராமன். நேற்றிரவு மாரடைப்பால் திடீரென காலமானார்.

36 வயதான சேதுராமன் திடீரென மரணமடைந்தது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மரணமடைந்த சேது ராமனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது.

பிரபலங்கள் அதிர்ச்சி

பிரபலங்கள் அதிர்ச்சி

அவருக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சேதுராமனின் மறைவு ஒட்டு மொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களின் அதிர்ச்சியையும் இரங்கலையும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

சேதுராமன் வீடியோ

சேதுராமன் வீடியோ

நடிகர்கள் சதீஷ், சந்தானம், ஜெயம் ரவி நடிகைகள் அதுல்யா ரவி, அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியுடன் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் சேது ராமன் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வைரஸை தடுக்கலாம்

வைரஸை தடுக்கலாம்

அதில், வீட்டிலேயே இருந்தால் வைரஸ் பரவலை தடுக்கலாம் எனவே தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். இந்த வீடியோவை நான் ஷேர் செய்ய காரணம், என்னை ஃபாலோ செய்பவர்கள் இதை அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள். அதன் மூலம் ஒரு 10 பேருக்காவது இந்த தகவல் பரவும்.

உயிரை காப்பாற்றலாம்

இந்த விஷயத்தை நீங்கள் அனைவரும் சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டப்பட போவது நீங்கள் மட்டுமல்ல, நான் மட்டுமல்ல, நம் எல்லோருடைய குடும்பங்களும்தான். நீங்கள் ஒரு டாக்டராவோ அல்லது நர்ஸாவோ இல்லாவிட்டாலும் கூட இப்போது ஒரு உயிரை காப்பாற்றலாம். வீட்டிலேயே இருங்கள்.. பத்திரமாக இருங்கள்.. இவ்வாறு சேதுராமன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் ஷேங்ர

சேது ராமன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மற்றவர்களுக்காக கவலைப்பட்டவர் இன்று இல்லாமல் போய் விட்டார் என வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X