உங்களுக்கு அழிவே கிடையாது.. திருமண நாளில் சேதுராமனை நினைத்து வாடும் மனைவி!
சென்னை : ஏழாவது திருமண நாளில் மறைந்த கணவர் சேதுராமனை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை சேதுராமனின் மனைவி உமையாள் கண்ணீரோடு பதிவிட்டுள்ளார்.
தோல் மருத்துவரான சேதுராமன் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நுழைந்தார். இவரின் பெரும் முயற்சிக்கு பிறகு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில் சந்தானம், பவர் ஸ்டாருடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடியது

நடிகர் சேதுராமன்
முதல் படத்தின் வெற்றியைத் தொடந்து, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன் 2020ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சேதுராமனுக்கு திருமணமாகி உமையாள் என்ற மனைவியும் ஒரு மகளும் இருந்தனர்.

ஆண் குழந்தை பிறந்தது
சேதுராமன் மறைவின்போது உமையாள் 2வது முறையாக கர்ப்பவதியாக இருந்தார். சேதுராமன் இறந்து ஐந்து மாதங்களுக்கு பின் உமையாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் கணவர் தான் எனக்கு மகனாக பிறந்து இருக்கிறார் என்று ஒரு உருக்கமான பதிவினை போட்டு, அனைவரின் மனதையும் கலங்கடித்தார்.

உங்களுக்கு அழிவே கிடையாது
இந்த நிலையில், பிப்ரவரி 12ந் தேதி அன்று தன்னுடைய திருமண நாளில் உமா தனது கணவர் சேதுராமனை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், இதே நாளில் ஏழு ஆண்டுகள் திரும்பிப் பார்க்கும்போது காலங்கள் எப்படி கடந்துவிட்டது என்பதை உணருகிறேன். நம்மை சுற்றி அனைத்தும் மாறிவிட்டது. ஆனால், அன்பு,காதல் மட்டும் அப்படியே இருக்கிறது. உங்களுக்கு அழிவே கிடையாது, எப்போதும் நீங்கள் வானத்தை தொட நினைக்கும் ஒரு சிறந்த மருத்துவர் தான்.

இந்த நாளை எப்போதும் கொண்டாடுவேன்
உங்கள் மீதான என்னுடைய காதலும் எப்போதும் அழியாது. இந்த திருமண நாளை நாம் எப்போதும் கொண்டாடியது இல்லை. ஏனென்றால் உங்களுக்கு வெளிக்காட்டுவது பிடிக்காது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த நாளை வெளிக்காட்டி அந்த மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணி மகிழ்ந்தேன். இனிவரும் காலங்களிலும் இதையே தான் செய்வேன் இனிய ஏழாவது திருமண நாள் வாழ்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த அனைவரும் உண்மையில் பதறி, தைரியத்தோடு இருங்கள் என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











